உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

41






தற்சமம்


வடமொழிச் சொற்கள், தமிழ் மொழியில், தமிழ்ச்சொற்கள் போலவே வந்து வழங்குவது

தற்சமம்.

தற்பவம்

எ.கா: புண்ணியம் – பாவம் கமலம் உருவம் போன்றவை.

வடமொழிக்கே உரிய சிறப்பு எழுத்துகளாகிய ஜ, ஷ, ஸ, ns, and, an க்ஷ ஆகிய ஐந்தும் தமிழ்மொழியில் வந்து வழங்கும்போது, தமிழ்மொழி இயல்புக்கு ஏற்ப தமிழ் எழுத்துகளாய் ஒலி மாற்றம் பெறுகின்றன. இவ்வாறு வடமொழிச் சொற்கள் தமிழ் ஒலிக்கு ஏற்ப மாறித் திரிவது தற்பவம் எனப்படும்.

எ. கா :

கஜம்

கசம்

ஸரஸ்வதி

சரசுவதி

வருஷம்

வருடம்

தேஹம்

தேகம்

பக்ஷி

பட்சி

2.5.2 இலக்கண வகைச் சொற்கள்

இலக்கண வகைச் சொற்கள் நான்கு வகைப்படும். அவை பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பனவாகும். இவற்றை இலக்கண நூல்கள் தெளிவாக விளக்குகின்றன.

2.5.2.1 பெயர்ச்சொல்

ஒன்றன் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது பெயர்ச்சொல் ஆகும். அம்பு, கண்ணாடி, தாமரை முதலியன பெயர்ச்சொற்கள் ஆகும். பெயர்ச்சொற்களுக்கு இருவகையாக இலக்கணம் சொல்லப்படுகிறது.

பெயர்ச்சொல் வேற்றுமையை ஏற்கும்.

பெயர்ச்சொல் காலம் காட்டாது.

முருகன் என்பது ஒரு பெயர்ச்சொல். இதனுடன் வேற்றுமை உருபுகள் சேர்ந்து பின்வருமாறு அமையும்.