உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

51







கு

நன்கு

றி

E

நன்றி

று

அம்

நன்று

நலம்

கருமை, செம்மை, இனிமை, நன்மை போன்ற சொற்களைப் பண்புப்பெயர்கள் என்றும் செங்கோட்டை, கருங்கடல், நற்பண்பாளர் போன்ற சொற்கள் பண்பைத் தம்முள் கொண்டுள்ளதால், பண்புகொள் பெயர்கள் என்றும் கூறப்படுகின்றன.

வினையாலணையும் பெயர்

செயலைக் குறிக்காமல், செயல் செய்தவரைக் குறித்து வருவது வினையாலணையும் பெயர். இது, வேற்றுமை உருபுகளை ஏற்று வரும். மேலும், எதிர்மறை வினையாலணையும் பெயர்களும் உள்ளன.

இளங்கோ வேகமாக ஓடினான்

இதில் இளங்கோ பெயர்ச்சொல். அவன் செய்த செயல், ஓடினான் என்பதாகும். இளங்கோ என்ற பெயர்ச்சொல்லிற்கு அவன் செய்த செயலாலேயே பெயர் சூட்டலாம்.

இளங்கோ வேகமாக ஓடினான்.

ஓடினவனுக்குப் பரிசு கிடைத்தது.

ஒரு

இப்போது இளங்கோ ஓடினவன் என்று பெயர் பெற்றுவிட்டான். அதாவது பெயர்ச்சொல் அதன் வினையால் அணைந்துகொண்டு பெயர் பெற்றுவிட்டது. எனவே இது வினையாலணையும் பெயர் எனப்பட்டது.

வினைச்சொல்

-

வினையாலணையும் பெயர்

> எழுதினான் – எழுதியவன்

> படிக்கின்றான்- படிக்கின்றவன்

> வளர்த்தான் – வளர்த்தவன்

> சேர்ந்தார் - சேர்ந்தவரை