உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






3.5.3.1 உடன்பாட்டுவினைத் தொடர்


ஒரு செயல் அல்லது தொழில் நிகழ்வதைக் குறிப்பது உடன்பாட்டுத் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

மழை பெய்ததால் பயிர் விளைந்தது.

படித்ததால் தேர்ச்சி பெற்றான்.

> பயிற்சியால் வெற்றி பெற்றான்.

அறத்தால் உயர்ந்தான்.

3.5.3.2 எதிர்மறைத் தொடர்

செயல் அல்லது தொழில் நிகழாமையைக் குறிப்பது எதிர்மறைத் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

மழை பெய்யாததால் பயிர் விளையவில்லை.

> படிக்காததால் தேர்ச்சி பெறவில்லை.

> முயற்சி செய்யாததால் வெற்றி பெறவில்லை. > அறம் இல்லாததால் தாழ்ந்து போனான்.

3.5.3.3 செய்வினைத் தொடர்

எழுவாயே செயலைச் செய்வதாகக் கூறுவது செய்வினைத் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

> கம்பர் இராமாயணத்தை இயற்றினார்.

> திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

தவளை தன் வாயால் கெட்டது.

3.5.3.4 செயப்பாட்டுவினைத் தொடர்

செயப்படுபொருளை எழுவாயாகப் பெற்றும், எழுவாயோடு மூன்றாம் வேற்றுமை உருபைப் பெற்றும், பயனிலையோடு 'படு' என்பதைப் பெற்றும் வருகின்ற தொடர் செயப்பாட்டுவினைத் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. கம்பராமாயணம் கம்பரால் இயற்றப்பட்டது.

வெற்றிபெற்றோர்க்குப் பரிசுகள் வழங்கப்பட்டன

கல்லணை கரிகாலனால் கட்டப்பட்ட டது.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.