பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தமிழ்க்கடல் ராயசொ திருமொழி ஒன்றே மெய்ப்பொருள் ஆகும் என்பதும். அரன் அல்லது சிவன் என்றாலும் நாரணன் அன்றித் திருமால் என்றாலும் அவை அனைத்தும் கடவுளையே குறிக்கும் சொல்லாகும். ஏற்றான் என்பது விடையில் ஏற்பவன்; புள் ஊர்ந்தான் என்பது கருடனின் அமர்ந்து செலுத்துபவன். ஏறுார்ந்த செல்வனாகிய எம்பிரான் சிவனும், புள்ளூர்ந்த புனிதனாகிய பூவைப் பூ புண்ணியனும் ஒருவனே. எப்பெயரால் வழங்கினும் மெய்ப் பொருள் ஒன்றேயாகும். எனவே ஒரே மெய்ப்பொருளை இருவகையாகப் பரவுகின்ற திருவெம்பாவை திருப்பாவை இரண்டையும் ஒன்றாக இணைப்பது இத்தொகுப்பு நூல். திருவெம்பாவை சிவனோடு இரண்டறக் கலந்த ஆண் தகையார் பாடியது. திருப்பாவை திருமாலையன்றி அறியாத பெண் அரசி பாடியது. திருவெம்பாவை சிவன் புகழ் பாடுவதில் இணையற்ற நூலாகிய திருவாசகத்தில் ஒரு பகுதியாக இலங்குவது. திருப்பாவை திருமால் சீர் பரவுவதில் தலை சிறந்த நூலாகிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் ஒரு பகுதியாகத் திகழ்வது. இந்த இரண்டு 'பாவை’கட்கும் குறிப்புரை விளக்கவுரை எழுதி வெளியிட்டவர் தமிழ்க்கடல். இயன்ற இடங்களிலெல்லாம் ஒப்புமை காட்டிச் செல்வது இந்நூலின் தனிச்சிறப்பு. இதில் தமிழ்க்கடலின் புலமையும் பெருமையும் சமரச நோக்கும் புலனாகின்றன. அடியேனும் 'திருப்பாவை. திருவெம்பாவை ஒப்பு நோக்கு' என்ற தலைப்பில் எழுதிக் கலைமகளில் வெளியிட்டேன். அது அடியேன் வெளியிட்ட கட்டுரை நூல் ஒன்றிலும் இடம் பெற்றுவிட்டது. 'சைவம் சாத்திர வளத்தால் பேர் பெற்றது; வைணவம் உரை வளத்தால் (வியாக்கியானம்) பேர் பெற்றது என்ற வழக்கு மொழி ஒன்றுள்ளது. திருப்பாவைக்கு ஆறு வியாக்கியானங்கள் உள்ளன; ஆறும் மணிப்பிரவாள நடையில் உள்ளன. சாதாரண மக்கள்