பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வு நூல்கள் 9 159 விளக்கம்: கன்னி. அம்பிகை உலகம் முழுவதையும் ஈன்றும் இன்றளவும் கன்னியாகவே உள்ளாள் சிவன்சக்தி தன்னை ஈன்றும் சக்திதான் சிவத்தை ஈன்றும் உவந்துஇரு வரும்பு ஊர்ந்துஇவ் உலகுயிர் எல்லாம் ஈன்றும் பவன்பிரம சாரி ஆகும்; பான்மொழி கன்னி ஆகும்; தவந்தரு ஞானத் தோர்சரூஇத் தன்மைதான் தெரியும் அன்றே என்பது சிவஞான சித்தியார் குறுமுனி-குட்டை வடிவமுள்ள முனியாகிய அகத்தியன். சிவபெருமான் தமிழை உரைத்தான். அவனுக்கு எதிராக இருந்து அகத்தியமை தமிழ்சொன்னான். தழற்புரை கடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான் என்பர் கம்பர். வரை - பொதிகை இது அகத்தியன் இருந்து தமிழ் சொன்ன இடம். இந்து - சந்திரன், அரவு - பாம்பு. 'இந்துவும் அரவும் உறவு செய்முடி' என்பதைத் திங்களுடன் அரவு உறவு செய்யும் வேணி என்று முன்னரும் கூறினார். மந்தாகினி - கங்கை, மந்தமாருதம் - இளங்காற்று தென்றல்). பொதிகையிற் பிறந்த தென்றல் சிவன் முடியிலிருக்கும் கங்கையிற் கலந்து பொதிகை மலையில் மிகுந்திருக்கும் சந்தன மரத்தின் மணத்தைக் கமழச் செய்தது என்க. இங்கு சிவஞான சித்தியாரின் மேற்கோள் பொருத்தம் அற்புதம். இன்னொரு எடுத்துக்காட்டு பாடல் 222. ஐந்துஆன னத்தோன் அருள்செய்ய அழகின் மிக்கான் ஐந்துஆன சொல்லால் "கணவன் தருக, ஐய!" என்றாள்;