பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியோர் கேண்மை .ே 27 குறிப்பிட்டு அவர்தம் பெருமையையும் உயர்ந்த பண்பாட்டையும் புலப்படுத்துவேன். நினைவு ~ 1 நான் பல்லாண்டுகள் இந்து மதாபிமான சங்கத்து நிர்வாக சபை உறுப்பினர். இதில் அவர் கூட்டம் நடத்தித் தீர்மானங்களைப் பதிவு செய்வதே எங்கும் கான முடியாத சிறப்பு: சரியான நேரத்தில் கூட்டம் தொடங்கும். கூட்டத்திற்கு வேண்டிய குறைந்த அளவு உறுப்பினர் (Quorum) வந்து விட்டவுடன் கூட்டத்தைத் தொடங்கி விடுவார். வந்த உறுப்பினர்கள் கையெழுத்து இட்டவுடன் தீர்மானங்கள் உடனுக்குடன் எண்ணிட்டுப் பதிவு செய்யப் பெறும் நிகழ்ச்சிப் பதிவேட்டில், இரண்டு தீர்மானங்கள் பதிவானவுடன் ஒர் உறுப்பினர் தாமதப்பட்டு வந்தால் அவர் இந்தத் தீர்மானங்களை அடுத்துக் கையெழுத் திடுவார். ஐந்து தீர்மானங்கள் எழுதப் பெற்றவுடன் மற்றோர் உறுப்பினர் வந்தால் அவர் அடுத்துக் கையெழுத்திடுவார். பிறகு யார் தாமதத்துடன் வந்தாலும் இப்படியே கையெழுத்திடுவார்கள். கூட்டம் முடித்தவுடன் இறுதியாக ஒருவர் வந்தாலும் கையெழுத்திடலாம். அதன் பிறகு தலைவர் கையெழுத்திட்டுப் பதிவேட்டு வேலையை முடித்து விடுவார். இந்த திகழ்ச்சிப் பதிவேட்டை நோக்கினால் தாமதமாக வந்தவர்கள் யாவர் என்பது தெரியும். அதன் பிறகு சிற்றுண்டி விருந்து நடைபெறும் ஒவ்வோர் உறுப்பினரும் ஒவ்வொரு கூட்டத்திற்கு விருந்தளிக்க வேண்டும். என் போன்ற ஏழ்மை நிலையில் 5. 'வில்லியும் சிவனும் என்ற நூலுக்குப் பெரியவர் திரு. சச்சிதானந்தம் பிள்ளை அவர்கள் வழங்கிய அணிந்துரையின் மூலந்தான் இராய.சொ. காரைக்குடி நகராண்மைத்தலைவர், தமிழ்நாட்டுக் காங்கிரஸ் உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் மாவட்டக் காங்கிரஸ் குழுவின் தலைவர், அனைத்திந்தியக் காங்கிரஸ் உறுப்பினர் பதவிகளில் இருந்ததை அறிந்தேன். காரைக்குடியில் இருந்த காலத்தில் ஒருவரும் இதைத் தெரிவிக்கவில்லை. இந்த அனுபவங்களால்தான் சங்கக்கூட்டத்தை அற்புதமாக நடத்தியதை இப்போது அறிந்து மகிழ்கின்றேன்.