பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க நூல்கள் 65 திருக்கோவையார் பாடலடியும் இதன் சிறப்பினைப் புலப்படுத்துவதைக் காணலாம். இந்த மூன்று இடங்களிலும் தமிழ் என்னும் சொல் அகத்திணைக்கு மறுபெயராய் நிற்றல் அறியப்பெறும் ஒரு மொழியின் பெயர் அம்மொழியின் கண் தோன்றியுள்ள பல்வகை இலக்கியங்களுள் ஒருவகை இலக்கியத்திற்குமட்டிலும் பெயராய் ஆளப்படுமாயின் அந்த இலக்கிய வகை அம்மொழியிலன்றிப் பிற எம்மொழி யிலும் காண்டற்கில்லை என்பது தெளிவாகின்றதன்றோ? இதனால் உலகில் நின்று நிலவும் மொழிகளுள் தண்டமிழ் மொழியின் தனிச்சிறப்பும் தமிழிலக்கிய வகைகளுள் அகத்தின்ணயின் சிறப்பும் வெள்ளிடைவிலங்கலெனத் தெரிகின்றதல்லவா? தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழாய் வந்திலார் கொள்ளார்.இக் குன்றுபயன் என்ற அடிகளால் இது மேலும் வலியுறுகின்றது. சண்டு "குன்று பயன்’ என்பது குன்று தரும் பயன்; அதாவது களவுப் புணர்ச்சி இன்பம்; குறிஞ்சி நிலத்து ஒழுக்க மாதலின், இவ்வாறு கூறப்பெற்றது. தமிழின் பொருளி லக்கணங் கல்லாத அறிவுக்குறைவுடையார் காதல் களவினையும் குறை கூறுவர் எனவும், தமிழை ஆய்ந்தவர் களவு நெறியை உடன்படுவர் எனவும் இப்பரிபாடல் பகுதி தெரிவிக்கின்றது. இங்கு இவ்வாசிரியர் கள விற் புணர்ச்சியை உடைமையான் வள்ளி சிறந்தவாறும் அத்தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும் உணர்த்துவர். இந்த அடிப்படையில் வள்ளுவரின் இன் பாலினைக் கருத்தில் கொண்டு ஆராய வேண்டும். இன்பத்துப்பால்: திருக்குறளின் மூன்றாம் பகுதியாக இன்பத்துப்பால் இருபத்தைந்து இயல்களைக் கொண்டது 'தகையணங்குறுத்தல் என்ற இயல் தொடங்கி ஊடக உவகை என்ற இயல் இறுதியாக இருபத்தைந்து இயங்களில் 6. பரிபா. 9 அடி 25-26.