பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

34 'கோடை யாயினும் கோடா ஒழுக்கத்துக் காவிரி புரக்கும் நல்நாட்டுப் பொருந” (22, 23) கோடைக் கால மாயினும் குன்றாமல் நீர் பாயும் காவிரி ஆறு காக்கின்ற நல்ல நாட்டின் மன்னனேஎன்பது பாடல் கருத்து. கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலை என்னும் நூலின் முற்பகுதி வருமாறு : "வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற்பாடிய தளி யுணவின் புள்தேம்பப் புயல் மாறி வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடற்காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி (1-8) வெண்மீன் (வெள்ளி) தனது வட திசையினின்றும் தென் திசைக்குச் செல்லினும், அதனால், மழை நீரை உண்ணும் வானம்பாடி நீர் பெறாமல் வருந்தும்படி மழை பொய்யாமல் வானம் பொய்த்து விடினும், மலை தொடங்கிக் கடல் வரையும் தான் பொய்க்காமல் நீர் சுரந்து பாயும் காவிரியாற்றின் நீர் வளத்தால் பொன் கொழித்து விளைவு அறாத வயல்கள் - என்பது பாடல் பொருள். . இளங்கோவடிகளின் சிலப்பதிகாரப் பாடல் பகுதி வருமாறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/36&oldid=1018920" இலிருந்து மீள்விக்கப்பட்டது