பக்கம்:தமிழ்க் காதல்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

தமிழ்க் காதல்



சுருங்கக் கூறுவர். அதனால் கைக்கிளை பெருந்தினைகளின் சின்னிலையை நாம் அறிகின்றோம். ஒர் அகப்பாட்டிற்கு இரண்டு மூன்று துறைகள்கூட எழுதப் பட்டுள. ஒரு துறை களவாகவும் மற்றொரு துறை கற்பாகவும் அமைந்துள. 1. உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. (கற்பு) 2. அல்ல குறிப்பட்டழிந்த தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது உமாம். (களவு) - 3. தோழியைப் பின்னின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது உமாம். (களவு) என மூன்று துறைகள் 125ஆம் அகப்பாட்டுக்கு உண்டு. இங்ங்னம் துறை பல கொண்ட பாடல்கள் சங்கவிலக்கியத்து நிரம்பக் காணப்படும்.இத்துறையாராய்ச்சியில் நான் புகவில்லை. முதலில் நிற்கும் துறையே அப்பாட்டின் துறையெனத் தழுவிக் கொண்டேன்' அகநானூறு நற்றிணை குறுந்தொகை ஐங்குறு நூறுகளின் உரையாசிரியர்களும் முதற்றுறைக்கே உரை கண்டனர். இந்த நான்கு தொகை நூல்களுக்கும் உரையெழுது முன்னரே, தொகுத்த காலத்துத் துறைகள் எழுதப்பட்டன என்பது நினையத்தகும். கலித்தொகையின் நிலைமட்டும் வேறாயிற்று. தொகுத்தவர் துறை வகுக்கவில்லை. உரையெழுத வந்த நச்சினார்க்கின்ரியரே துறையும் எழுத வேண்டியவராயினார். இவர் தொல்காப்பியத்துக்கும் உரை கண்டவரன்றோ. இதன் விளைவு என்ன? தொல்காப்பியத்தில் தாம் வலிந்து எழுதிய இலக்கணங்களுக்கு இலக்கியங் காட்டவேண்டிக் கலித்தொகைத் துறைகளைத் திரித்து எழுத நேர்ந்தது. முற்கூறியாங்கு அகநானூறு முதலிய தொகைகளின் பழந்துறைகளை உள்ளபடி உடன்பட்ட யான், நச்சினார்க்கினியர் எழுதிய கலித்தொகைத் துறைகளை மட்டும் திறனாய்ந்து மேற் கொண்டுள்ளேன். எட்டுத் தொகையுள் கலித்தொகை யிற்றான் கைக்கிளை பெருந்திணைப் பாடல்கள் இருத்தலின், இத்திறனாய்வு இத் தொகையளவில் இன்றியமையாதாயிற்று. - --> கைக்கிளை பெருந்திணைகளின் இலக்கணம் பலவகையான கருத்து வேற்றுமைக்கு உரியது: அகத்திணையின் பொது விலக்கணத்கைத் தெளிந்து கொண்டால், இக் கருத்து மாறுகள் 1. நூலிற்கண்ட துறைகள் சிலவற்றில் இரண்டாவதாக அமைந்ததும், சிலவற்றிற்கு உரையாசிரியர்கள் எழுதுவதும், பிறவற்றைவிடப் பொருத்தமுள்ளனவாகத் தோன்றுகின்றன. டாக்டர் உ.வே.சா. குறுந்தொகைப் பதிப்பு, முகவுரை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/102&oldid=1238360" இலிருந்து மீள்விக்கப்பட்டது