பக்கம்:தமிழ்க் காதல்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

105


அண்ணன்மார் நாணத்தால் தலைகீழாயினர். காதற் களவு தமிழ்நிலத்தில் அறமாகப் போற்றப்பட்டது என்று இதனாலும் உறுதிப்படும். களவும் கற்பே தமிழ் வரலாறு என்னும் நூலாசிரியர் களவு அறமாகாது; பிழை நெறியாம் என்று விரித்துரைக்கக் காண்கிறோம். சங்கப் பாடல்களுக்கு இவர் பிழையாகச் செய்து கொண்ட கருத்துரைகள் இப்பிழை முடிபிற்குக் காரணமாயின. அவற்றுள் ஒன்று காட்டுவன்; குறமகள் அவளெம் குலமகள் அவளொடும் - அறுமுக வொருவனின் அடியிணை தொழுதேம் துறைமிசை தினதிரு திருவடி தொடுநர் பெறுகநன் மணம்விடு பிழைமணம் எனவே. (சிலப். குன்ற, 18) பிழை மனத்தை ஒழித்து நன் மணத்தை அருளுக என்று தோழியும் தலைவியும் முருகன்பால் வேண்டுகின்றனர் என இளங்கோ கூறுவர். பிழை மணம் என்பது களவைக் குறிக்கும் என்றும், களவொழுக்கத்தைத் தவிர்த்து நாடறிந்த நன்மணமாகிய கற்பொழுக்கத்தை முடிப்பிக்க என்பதே தோழியின் வேண்டுரை என்றும், களவைப் பிழைமணம் என்றதனால் களவு தீது என்பது தெளிவு என்றும், மகாவித்துவான் ரா. இராகவவையங்கார் அவர்கள் முடிவுக்கு வருவர். இளங்கோ பிழைமணம் என்றது களவையா? இல்லை; இல்லை.அகத்திணைக் களவில் வெறியாட்டு நிகழும் என முன்னே படித்திருக்கின்றோம். இவள் வாட்டம் முருகனால் விளைந்தது என்று பூசாரி வழக்கப்படி சொல்வான். அவனை இகழ்வதும், அவன் மேல் ஏறிய முருக தெய்வத்தை இகழ்வதும் காதலியர்தம் துணிச்சல், - வேலன் மடவன் அவனினும் தான்மடவன் - ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின் (சிலப். குன்ற, 13) எனச் சிலப்பதிகாரத்துக் குறிஞ்சிக் காதலாளின் துணிவுரையைக் கேட்கின்றோம். இவ்வெறியாட்டமயத்து வருவது பெறுக நன்மணம் விடு பிழைமணம் என்ற அடி என் காதலான் இன்னும் களவையே விரும்புகின்றான்; அவனுக்கு அக்களவெண்ணத்தைத் தவிர்த்தருள்; திருமண எண்ணத்தை ஊட்டுக’ என்று தலைவன் செயலைச் சொல்லுதற்காக வெறியாட்டு நடப்பதில்லை. தலைவ னைத் திருத்துக என்று முருகன் முன் முறையிடார் தலைவியர். தலைவனது நெறியைப்பற்றிப் பேசும் இடம் வெறியிடம் அன்று என்ற மரபை நாம் உணர வேண்டும். வெறியும் நொதுமலர் வரைவும் கற்புக்கு ஏலா ஆதலின், அவற்றை விலக்க முயல்வர் காதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/119&oldid=1238408" இலிருந்து மீள்விக்கப்பட்டது