பக்கம்:தமிழ்க் காதல்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

தமிழ்க் காதல்


அஞ்சினார்கள். வெறியாட்டு, அறத்தொடு நிற்றல் எனவரும் ஒவ்வொரு கட்டத்திலும் இவ்வச்ச வுணர்ச்சியை அறிகின்றோம். மறை வெளியாதற்கு முன்னரே, மறையென ஒன்று நிகழ்ந்தது என்று தெரியாதபடியே, மணம் நடந்துவிட வேண்டும் என்று தோழி தலைவனை வரைவு முடுக்குகின்றாள்; அரும்பாடு படுகின்றாள். கழியக் காதல ராயினும் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் வரையின் எவனோ வான்தோய் வெற்ப கணக்கலை இகுக்கும் கறியிவர் சிலம்பின் மனப்பருங் காமம் புணர்ந்தமை யறியார் தொன்றியல் மரபின் மன்றம் அயர (அகம்.112) "தொன்றியல் மரபின் மன்றல்” என இயல்பு மனத்தை பெற்றோர் கூட்டுவிக்கும் மனத்தைத் தோழி சுட்டுதலை நினைக மிளகுக் கொடிபடர்ந்த மலைச்சாரலில் நிகழ்த்திய காமக்களவினைத் தலைவியின் பெற்றோர் அறியாத நிலையில் வைத்தே, மரபுமன்றல் செய்துவிடவேண்டும் என்று தோழி ஆசைப்படுகின்றாள், காதலர்க்குள் எவ்வளவு அன்பிருந்தாலும், நீடித்த களவின்பம் பழிதருவது என்று தலைவனை இடித்துரைக்கின்றாள். களவுக்கு அஞ்சுகின்றனர் என்பது தானே இவற்றின் உட்கிடை. தமிழ்ச்சமுதாயத்துக் களவு நெறி ஒன்றல்லது வேறின்றெனின், இவ் வச்சம் பொருளற்றது காண். ஒரூர்க்கு வழி இரண்டு மூன்று இருப்பின் , இவர் எவ்வழி வந்தார் என ஆராய்தற்கும் வினாதற்கும் பொருளுண்டு. வழியொன்றே யாயின், வந்தவழி சொல்லாமலே உணரப்படும்; ஒத்துக்கொள்ளவும் படும். இறையனார் அகப்பொருள் நூற்பிப்பதுபோல, களவுநெறியே நெறியாயின்மகள் களவைப் பெற்றோர் உணர்தலும் உடன் படுதலுமல்லது கொதித் தெழுதல் பொருளற்றது. கற்புக்கு வழி இரண்டு உண்டாமாதலின், மரபு நெறிப்பட்ட பெற்றோர் கொதித்தெழுந்தனர் என்று அறிகின்றோம். தலைவியரும் தோழிமாரும் கூறும் களவுப் பாடல்களைத் தொகுத்து ஆராய்வோமாயின், உற்றார்க்கும் ஊரார்க்கும் களவை அறவே மறைத்து, விரைவில் திருமணம் கொள்ள வேண்டும் என அப்பெண்களுக்கு இருந்த நாணமும் கவலையும் நாட்டமும் புலப்படும். இம்மறைவு முயற்சியைப் "படாமை வரைதல்” என்று தொல்காப்பியம் (1085) நூற்பிக்கும். மரபு மணத்தைத் "தமரிற் பெறுதல்” (தொல்.1444) என்று கூறுவர் ஆசிரியர். களவை முற்றும் மறைத்தோ அன்றிச் செவ்விதாக வெளிப்படுத்தியோ, எப்படியும் பெற்றோரின் இசைவையும் வாழ்த்தையும் பெற்று, மரபு மணம் கொள்ளவேண்டும் என்ற பெருவிழைவு அகத்தினைப் பெண்ணாட்களுக்கு இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/124&oldid=1238413" இலிருந்து மீள்விக்கப்பட்டது