பக்கம்:தமிழ்க் காதல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

113


இவ்வரலாற்று மெய்ச்செய்தி கற்பிப்பது என்ன? தமிழர் திருமணத்துக்குத் தாமே தேரும் களவொன்று தான் நெறியாக இருந்தது என்பதில்லை, தமர் கொடுப்பக் கொள்ளல் என்னும் மற்றொன்றும் நெறியாக இருந்தது என்று தெளிகின்றோம். இந்நெறியும் பழைமையுடையது, பரவிக் கிடந்தது, மரபென மதிக்கப்பட்டது என்ற கருத்தெல்லாம் “தொன்றுஇயல் மரபின் மன்றல்" (அகம். 12) என்ற தொடரால் வலியுறும் மரபு நெறிக்கு மதிப்பின்றேல் பாரியின் பெருமை சிறும்ைப்படக் கபிலர் அந்நெறியை மேற்கொள்ளாரன்றோ V மரபுவழிக் காதலர் களவின் வழிவந்த பழைய காதலர்க்கும், களவின் வழி வாராப் புதிய காதலர்க்கும், இன்பநிலையிலும் அறநிலையிலும் வேறுபா டுண்டோ? மணநிலைகள் வேறுபடப் புலவர்கள் பாடியதுண்டோ? என்று காணற்குச் சங்க இலக்கியங்களைத் துருவின், வேறுபாடு யாதும் கண்டிலோம். கூட்டுக்களிப்பில் இருதிறத்தாரும் தம்மை மறக்கின்றனர். உரையாடலில் யாரும் இளைத்தாரிலர். ஊடல் முடிவில் உயிரொன்றாகின்றனர். தமர்நமக் கீத்த தலைநாள் இரவின் உவர்நீங்கு கற்பினெம் உயிருடம் படுவி முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப் பெரும்புழுக் குற்றதின் பிறைநுதற் பொறிவியர் உறுவளி யாற்றச் சிறுவரை திறவென ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் உறைகழி வாளின் உருவுபெயர்ந் திமைப்ப மறைதிறன் அறியா ளாகிப் பையென நாணினள் இறைஞ்சி யோளே. இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே (அகம். 136) "என் உயிர்படு மெய்யாளே, புதிய ஆடையால் முழுதும் போர்த்த நின்உடல் புழுக்கமடையாதா? காற்று பணிசெய்தற்கேனும் இடங் கொடு என்று சொல்லி, ஆர்வ நெஞ்சத்தால் ஆடையைப் புறப்படுத் தினேன். உறையைக் கழித்த வாள்போல் அவள் மேனி ஒளிறிற்று. கூந்தலாடையால் அற்றம் மறைத்து நாணி ஒசிந்தாள்” என்று மரபுநெறிக் காதலன் தலைநாள் இரவின் பாயல் விளையாட்டைப் பல நாட்சென்று நினைக்கின்றான். களவுக்காதல் உறவில்லா தாரிடத்தும் செல்லும், உறவுடையாரிடத்தும் செல்லும். இவ்விரு வகை நிலை மரபுக்காதலுக்கும் ஏற்கும். பெற்றோர்கள் தம்மக்கட்கு உறவுகடந்தும் ஊர்கடந்தும் மணங்கான முயல்வர். தாய்வழியாலோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/127&oldid=1238424" இலிருந்து மீள்விக்கப்பட்டது