பக்கம்:தமிழ்க் காதல்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

131



என்று தலைவன் காதலியின் அன்பையும் அறிவையும் வியக்கின்றான். உடன்வரும் காதற் களவர்களை வழியிடைக் கண்டார் வில்லேந்திய இவன் காலில் வீரக்கழல்கள் உள; வளையல் அணிந்த இவள் மெல்லடிகளில் சிலம்புகள் உள ("வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே”-குறுந்:7) என்று காலணி பார்த்து, இன்னும் திருமணம் கொள்ளாதவர்கள் எனத் துணிகின்றனர். இந் நல்லோர் யார்கொல், பேணத்தக்கவர்கள் என்று தண்ணளிக்கின்றனர். நக்கண்ணையார் ஆமூர் மல்லனைக் காமுற்றாள். அம்மல்லன் வேற்று நாட்டு வேற்றுாரினன். அவனது மற்போர் வென்றியினைக் கண்குளிர்ப்பக் காணும் இனிய வாய்ப்பு அவட்குக் கிடைத்தது.மகிழ்ச்சியில் “அஞ்சிலம்பு ஒலிப்ப ஒடினேன்" (புறம். 85) என்று நக்கண்ணையாரே பாடுகின்றார். காலிற் சிலம்பு உடையாள் குமரி என்று ஒரு சமுதாய உண்மையை அறியவும் துணியவும் இம்மேற்கோள்கள் கரியாவன. - t குமரிக்குச் சிலம்பு அடையாளம் என்பதனால், குமரிக் கழிவுக்குச் சிலம்புக் கழிவு வேண்டப்படும். எனவே திருமணத்திற் சிலம்புகழி நோன்பு ஒரு கரணமாயிற்று, சடங்காயிற்று, இன்றியமை யாத விழாவாயிற்று. இது சங்கச் சமுதயா வழக்கு. உடன்போகிய காலத்து உறவினரில்லாப் புதியதோர் நாட்டில் மணஞ் செய்து கொண்டாலும், ஆண்டும் சிலம்பைக் கழற்றும் சடங்கு நிகழும்; நிகழ வேண்டும் என்று அறிகின்றோம். உள்ளாது கனிந்த முள்ளெயிற்றுத் துவர்வாய்ச் சிறுவன் கண்ணி சிலம்பு கழிஇய - அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே. (அகம். 385) சிலம்பு கழிஇய செல்வம் - பிறருணக் கழிந்தவென் னாயிழை யடியே. (நற். 273) தன் மகள் சென்ற நாட்டிற் சிலம்பு கழித்தல் கொடிது என ஒரு தாய் சினக்கின்றாள். சிலம்பு கழித்தல் ஒரு செல்வம் என்றும், அதனைக் காணும் பேற்றை ஈன்ற தாய்க்கு அளிக்காது பிறர்க்கு அளிக்கப் போயினாளே என்றும் ஒரு தாய் அவலிக்கின்றாள். “கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே, புணர்ந்துடன் போகிய காலையான” (1088) என்னும் தொல்காப்பிய விதி நடைமுறையில் இருந்த வழக்கு என்பதனையும், அவ்வழக்கின் உட்பொருளையும் மேலை விளக்கத்தால் அறிக. w - சிலம்பு அணிநோன்பு என ஒரு விழாமரபு காணப்படாமையின், பெண் குழந்தைகட்குச் சிலம்பு இடுதல் மிக இயல்பான வழக்கு என்று ஊகிக்கலாம். அக்குழந்தையணியைத் திருமணத்திற்குமுன் 1. அகம்.321: அரிபெய்து பொதிந்த தெரிசிலம்பு கழிஇ யாயறி வுறுதல் அஞ்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/145&oldid=1238450" இலிருந்து மீள்விக்கப்பட்டது