பக்கம்:தமிழ்க் காதல்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

161



хуш

இயற்கையின் காதலாட்சி

இயற்கை காதல்மாந்தர்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மிகவும் தாக்கி உறுத்திற்று என்பதனைப் பொதுவாக அகத்திணைப் பாடல்களிலும், சிறப்பாக ஐந்தினைப் பாடல்களிலும் காண்கின்றோம். ஒவ்வொரு அகத்துறையும் காதல் நினைவும் இயற்கையோடு உறவுடையது. பண்டைத் தமிழினத்தின் காதலுள்ளத்தோடு கலந்த ஒர் அகவுறுப்பாகவே புறவியற்கை விளங்கிற்று. - - நின்னே போலும் மஞ்ஞை ஆலநின் நன்னுதல் நாறும் முல்லை மலர நின்னே போல மாமருண்டு நோக்கு நின்னே யுள்ளி வந்தனென் - நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே (ஐங், 492) வினை.வயிற் சென்ற தலைமகன் தான் மிகவிரைந்து வந்ததற் குரிய காரணத்தைக் காதலிக்கு அறிவிக்கின்றான். "மயில் அசைவில் நின்சாயலை அறிந்தேன்; முல்லைமலரில் நின்கூந்தல் மணத்தை நுகர்ந்தேன்; மான்பார்வையில் நின்மருட்சியைக் கண்டேன். மயிலும் முல்லையும் மானும் எனக்கு அவையாகத் தோன்றவில்லை, நீயாகத் தோன்றின. நின்னையே எனக்குக் காட்டின. வழியிடை இயற்கையெல்லாம் நின்னுணர்வை எனக்கு மிகுத்தமையின், வேறொன்றையும் நினையாது நின்னையே நினைத்து ஓடிவந்தேன்” என்கின்றான் காதலன். மயிலின் சாயல்போலும் நின்சாயலையும், முல்லை போலும் நின் கூந்தல் மணத்தையும், மான் மருட்சிபோலும் நின் கண்நோக்கத்தையும் கண்டேன் என்ற நடையில் தலைவன் கூறினானல்லன், அவைகளை உவமப்படுத்தாது, நின்னே போலும் மஞ்ஞை என அவற்றுக்கு அவளை உவமப்படுத்துகின்றான். இதனால் தலைவன் தன் உள்ளத்தை இயற்கையால் ஏற்றிக் காண்கின்றான் என்பது பெறப்படவில்லையா? * - நலமாண் எயிற்றி போலப் பலமிகு நன்னல நயவர,வுடையை - - - என்னோற் றனையோ? மாவின் தளிரே (ஐங். 365) திருமணச் செலவிற்காகப் பொருளிட்டச் சென்ற காதலன் வரும் வழியில் தளிர்த்து நிற்கும் ஒரு மாமரத்தை காண்கின்றான். மாநிறம் என்ற சொல்வழக்கு தமிழில் உண்டு. இது தமிழினத்தின் மேனிநிறத்தைப் பொதுவாகக் குறிக்கும். மாநிறம் என்று சொல்லும் போது மாந்தளிரின் நிறத்தையே கருதிச் சொல்லுகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/175&oldid=1238514" இலிருந்து மீள்விக்கப்பட்டது