பக்கம்:தமிழ்க் காதல்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

219


வாழி ஆதன்! வாழி அவினி!
பால்பல ஊறுக பகடுபல சிறக்க
எனவேட்டோளே யாயே, யாமே
வித்திய உழவர் நெல்லொடு பெயரும்
பூக்களுல் ஊரன் தன்மனை
வாழ்க்கை பொலிக எனவேட் டேமே (ஐங். 3)

தலைவன் புறத்தொழுக்கத்தில் திரிந்தபோது, தலைவி மிகப் பொறுமையோடு இல்லறச் சிந்தனை உடையவளாக இருந்தாள் எனவும், தலைவன் அறிவுவந்து மனைவாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் எனத் தோழியர் தொழுதனர் எனவும், ஐங்குறு நூற்றின் முதலைந்து பாடல்கள் இயம்புகின்றன. தலைவனும் தன் போக்குத் தகாது என்று தெளிந்து திருந்தித் தலைவியோடு என்றும் நீங்காதிருந்தான் எனவும் அப் பாடல்கள் முடிக்கின்றன. இன்பமாயினும் துன்பமாயினும் உணர்ச்சிகளை உச்சியளவும் கொண்டு செல்லாது, துணிக்கொம்பில் ஏறாது, காதல் திகழ்ச்சிகளை அளவாக, அறமாக, நலமாக முடிப்பது ஐந்திணையின் இயல்பு. மேலும் ஐந்திணைக் காதற்றுறைகளில் அயலார், வெளியார் பெருவரவுக்கு இடமில்லை. ஏன் தலைவனது தாய் தந்தை முதலான உறவினர்க்குக்கூட இடமில்லை. எல்லோரும் தலைவியின் அணிய உறவினர்களே. ஆதலின் இகல், பகல், சூழ்ச்சி, முரண் எவையும் ஐத்திணைக்கண் தோன்றா. தலைவன் தலைவியிடத்துப் பேரன்பினன். ஆதலின், அவன் அவளது உறவினர்க்கு ஊறுபட யாதும் மேற்கொள்ளான்.

அறஞ்சாலியரோ! அறஞ்சா வியரோ:
வறனுண் டாயினும் அறஞ்சா வியரோ!
வாள்வனப் புற்ற அருவிக் -
கோள்வல் என்னையை மறைத்த குன்றே (ஐங். 312)

தல்ைவி மலையை வாழ்த்தும் பாடல் இது. ஏன் வாழ்த்துகின்றாள்? உடன்போகுங் காலத்து அவளது ஐயன்மார்கள் பின்தொடர்ந்து பற்றினர்.அவர் வரவைக் கண்ணுற்றான் தலைவன். அவன் யாரையும் வென்றி கொள்ளவல்ல திறலினன் எனினும் த்ன்மானம் பார்த்திலன்; மைத்துனர்களை எதிர்த்திலன்; எதிரே நின்றால் ஒருகால் கதம் தோன்றும், இகல நேரிடும் என்று, என் செய்தான் அக் காதலன்? காதலியின் நலங்கருதி அருகிருந்த குன்றினுள் மறைந் துகொண்டான். தங்கை தனிமையும் காதலிளைஞன் தன் ஒட்பமும் அண்ணன்மார்களை நானச் செய்தது. அவ்விடத்துக் குன்றொன்று இல்லாதிருந்தால் நிலை என்னாயிருக்கும் என்று ஒளிந்துகொள்ள உதவிய மலையை வாழ்த்துகின்றாள் தலைவி. ஐந்திணைக்கண் நிகழ்ச்சியும் எல்லைகடந்து செல்லா என இதனால் அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/232&oldid=1400302" இலிருந்து மீள்விக்கப்பட்டது