பக்கம்:தமிழ்க் காதல்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

தமிழ்க் காதல்



தன் கொடையைத் தன் கல்வியைத் தன் மறத்தைத் தன் இல்வாழ்க்கையை ஒருவன் பிறரறியக் கூறும் வழக்கு உண்டு. தன் மனைவியொடு துய்த்த இன்பதுட்பங்களை எடுத்து விளக்கும் வழக்கு உண்டோ? விளக்குவான் உளனெனின், நாணிலன் அறிவிலன் ஆவான். கேட்பானுளவெனின் அவனும் அன்னன் ஆவான். ஒருவனும் ஒருத்தியும் உறவு கொள்கின்ற செய்கையில் தோன்றும் இன்பப்பகுதிகள் இன்புற்ற இருவர்தம் அளவில் அறியப்படுபவை; பிறர் யார்க்கும் அறிவிக்கலாகாதவை. காதல் நுண்ணிய உணர்வுகளுள் மிக நுண்ணியது; நாணச் செய்கைகளுள் மிக நானுக்குரியது; உலகிற்கு உரியது என்றாலும், இருவர் இருவர் என்ற நிலையில் அடங்கிவிடுவது. நாகரிகம் என்று தெளிந்ததெடுத்த நல்ல காதலோட்டங்களைக்கூட விடாது கூறுதல் விரும்பத்தக்கதன்று. கூறப்புகின், நாண் அலையக் காணலாம். ஒரு சில இடைக்கால நூல்களைப் போலக் காதலை இலக்கியக் கும்மாளம் ஆக்குவது ஆண் பெண் உறவை இகழ்வதொக்கும். பொதுப்பட மொழிவதே இந்நிலைக்கு வருமாயின், மெய்யுணர் முறைகளைப் பெயர் சுட்டிக் கூறல் மிகப் பொல்லாததன்றோ? மேலும் ஒன்று நினைக:

காதற்றுறையில் பெயர்க்குறிப்பு எதிரான காதற் போக்கை உண்டாக்கும்; கல்வியை ஊட்டாது வேறுபல சிந்தனைகளை உண்டாக்கும். பாற்கல்வி எல்லா மக்கட்கும் உரியதாய் இனியதாய்ப் பதிவதாய்ப் பயனுடையதாகல் வேண்டுமெனின், காட்டுக்கள் தலைவன் தலைவி எனப் பொதுப்படுதலன்றி, ஆட்டனத்தி ஆதிமந்தி எனத் தனிப்படுதல் இல்லை. பருமை பரந்துபடும் நுண்மையாதல் வேண்டும். நிகழ்ந்த காதல்கள் வரலாற்றுச் சுவடற்றுக் காதல் மணமாக வீசுதல் வேண்டும். இன்ன கல்வியியலையும் உளவியலையும் தெளிந்த நம் முன்னோர் பிற பரு இலக்கியங்களைப் போலாது, அகத்திணை என்னும் நுண்ணிலக்கியத்தை ஒரு பெயர் கொள்ளா உலகப் பொதுவிலக்கியத்தை வேண்டுமென்றே படைத்தனர். -

மக்கள் நுதலிய அகனைந் திணையும்

சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர் (தொல். 999)

என்ற முறையிலக்கணத்தை மீண்டும் நினைவோம். ‘மக்கள் நுதலிய அகன்” என்பது இரு பொருள்பட அமைந்தது. (1) சமுதாயத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டது அகத்திணை என்பது ஒரு பொருள். இதனால் ஒருவர் நிலைக்களம் அல்லர் சமுதாயம் நிலைக்களம் என்று அறிகின்றோம். (2 எல்லா மக்களையும் நோக்கிச் செய்யப்பட்டது என்பது மற்றொரு பொருள். இதனால் பரந்த குறிக்கோளை அறிகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/271&oldid=1400381" இலிருந்து மீள்விக்கப்பட்டது