பக்கம்:தமிழ்க் காதல்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் பாட்டு

265



வெள்ளிவீதியின் அகப்பாட்டு

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணிஇயர் வேண்டும்

திதலை அல்குலென் மாமைக் கவினே! (குறுந். 27)

மள்ளர்விழா நிகழும் களத்தும் மகளிர் துணங்கையாடும் அரங்கத்தும் யாண்டும் தக்க என் கணவனைக் காணேன் என்று, பெயர் சாராது பொதுப்படப் பாடியதால், ஆதிமந்தியார் பாட்டு அகத்தமிழாயிற்று. தலைவனது நெடும் பிரிவால் என் அழகுநலன் அவனுக்கும் எனக்கும் நுகர்வின்றிக் கொன்னே கழியும் என்று நிகழ்ச்சியைப் பொதுவுறயாத்தலால், வெள்ளிவீதியார் அகப்புலவரானார். எல்லோரும் எனது எனது என்று சொல்லிக் கொள்ளும் பொதுநிலையில் தன்னை நிறுத்திக்கொண்டு, புலவன் உணர்ச்சிகளை அமைத்தலால், காதற் பாட்டுக்கள் இவ்விலக்கிய வுலகில் நல்லிடம் பெறுகின்றன என்பர் அட்சனார். சங்கப்பா தனக்குவமையில்லாச் சமுதாயப்பா சமுதாய நெஞ்சத்தையும் சமுதாய ஆண்தகையையும் காட்டும் தனித்தகையுடையது அது என்பர் பேராசிரியர் தெ.பொ.மீ

காதற் பயில்வைப் பொதுவுரிமையாக்க வேண்டும் என்ற சங்கத் தமிழ்ப் பண்பிற்கேற்ப, ஆதிமந்தியும் வெள்ளிவீதியும் அகப்பாட்டுப் பாடினர். அதனாலென்ன? அன்னவர் நோக்கத்தை மற்றையோர் கெடுத்துவிட்டனர்.

குற்றப்படா அமைப்பு

பரணர் வரலாறுகளை அமைத்துப் பாடும் தனிப்புலவர். அவர்தம் அகப்பாட்டில் வரலாற்றுக் குறிப்புக்கள் பலவுள. அவ்வகைக் கருத்துக்கள் பயிற்சி மிகுதியால் அவர் பாடும் போது முன்வந்து நிற்கும்போலும். கணவனைக் காவிரி அடித்துச் சென்றதும், ஆதிந்மதி அறிவு பிறிதாகிப் பேதுற்றதும், ஆட்டனத்தியைக் கண்டீரோ என்று நாடு நாடாக ஊர் ஊராக அழுத கண்ணளாய்த் திரிந்தலைந்ததும், மருதி என்னும் மங்கை ஆதிமந்தியின் காதலனைப் பிழைப்பித்துத் தானுயிர் நீத்துத் தன்னிகரில்லாப் புகழ் கொண்டதும் ஆய அவல நிக்ழ்வுகளை நான்கு பாடல்களில் (அகம் 76, 135, 222, 236) பரணர் சுட்டிக் காட்டுவர்; உவமை வாயிலாக வெளிப்படுத்துவர். இதனால் ஆதிமந்தியாரின்

1. An Introduction to the Study of Litereture, p, 97 2. “The Théory of Cankam poetry” in Tamil Culcure Vol. I, No. 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/278&oldid=1394536" இலிருந்து மீள்விக்கப்பட்டது