பக்கம்:தமிழ்க் காதல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

தமிழ்க் காதல்



எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்

(தொல் 1168)

என்று பாலியலறிஞன் சுட்டியாங்கு உடம்போடு ஒட்டிய இயற்கைத்து. ஆதலின், அகப்பாடல் உயிரிகள் பிறந்ததற்கும் பிறப்பிப்பதற்கும் அடிப்படையான இன்பவுணர்வை - உலகின் மருங்கு அறாது வழிமுறை காக்கும் காமத்துடிப்பைப் பொருளாகக் கொண்ட தலைமையுடையது என அறியத்தகும். "புலவனுக்கு மதம் எனப்படுவது ஆண் பெண் காதலே. அக்காதல் இலக்கியத்தின் வற்றா ஊற்றிடங்களுள் ஒன்று. கவிதை யெண்ணத்தை உருவாக்கும் சார்புகளுள் ஒன்று" எனக் கவிஞனுக்கும் காதலுக்கும் அமைந்த நட்பினை எடுத்து மொழிவர் ஆங்கிலப் பேராசிரியர் ஆர்போர்டு', சங்கப் புலவோர் தாம் மெய்யாகக் கண்ட இவ்வுலக மனப்பட்டவர். ஆதலின், உலகம் நீடுவாழ உயிர்க்கொடை செய்யும் காமம், அன்னவர் நெஞ்சினைக் கொள்ளை கொண்டதும், தமிழ்ப் பாடலுக்குத் தலைப்பொருளாயதும் வியப்பாமோ! தமிழ்த் தொல்லிலக்கணன் தொல்காப்பியன் அகத் திணையின் இயல்பு தெரிவிக்க, அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என இயல் நான்கு வகுத்துள்ளனன் புறத்திணையின் இயல்பு தெரிவிக்கவோ, அவனால் எழுதப்பட்ட இயல் ஒன்றே. சங்கப் பெருஞ்சான்றோர் கபிலர், ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழின் மேன்மையை அறிவுறுத்த விரும்பினார்; விரும்பியவர் அவனுக்கெனத் தாமே குறிஞ்சிப்பாட்டு ஒன்று இயற்றினார். இஃது ஒர் அகத்திணைப்பா. கபிலர் புறம் பாடாது அகம் பாடிய நோக்கம் என்ன? தமிழினத்தின் அறிவுச் சின்னம் அகத்தினைப் படைப்பு: தமிழ்மொழியின் தனி வீற்றினை அயல் மொழியான் உணரவேண்டுமேல், அவனுக்கு முதலில் கற்பிக்கவேண்டும் பொருள் அகப்பாட்டே என்று அவர் உள்ளியிருப்பர். புலவர் பாராட்டிய புலவர் கபிலராதலின், வேற்று மொழியிற் பெறலரும் தமிழ்க் கூறுகளை, அறியவும் அறிவுறுத்தவும் வல்லார் அவரன்றி யார்? "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குப் பாடியது” எனக் குறிஞ்சிப் பாட்டுக்குத் துறைக்குறிப்பு எழுதப்பட்டுள்ளது. “இந்நூல் என் நுதலிற்றோ எனின், தமிழ் துதலியது” என்று இறையனார் அகப்பொருள் உரையாளர் குறிக்கின்றார். "ஒண் தீந்தமிழின் துறை வாய் நுழைந்தனையோ” என்று திருக்கோவை பாடும். சண்டெல்லாம் தமிழ் என்னும் சொல் அகத்திணைக்கு 1. Professor C.H. Herford: Shakespeare’s Treatment of Love and Marriage and ofter ressays. p. 152. 2. ஒண்தீந் தமிழின் துறை - அகத்திணையின் துறை என்பது பொருள். அகமும் புறமும் தமிழின் துறைகளாவன என்று கோவையுரையாசிரியர் சொல்வது பொருத்தமில்லை. அகத்தையும் புறத்தையும் திணையெனச் சுட்டுவதே மரபும் முறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/28&oldid=1244759" இலிருந்து மீள்விக்கப்பட்டது