பக்கம்:தமிழ்க் காதல்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

283



குக்கூ என்றது கோழி; அதனெதிர்
துட்கென் றன்றென் தூஉ நெஞ்சம்;
தோய்தோய் காதலர்ப்.பிரிக்கும்

வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே (குறுந் 157)

மாதப்பூப்பு எய்திய தலைமகள் உரைத்த பாட்டு இது. சங்க இலக் கியத்துள் இதுபோன்ற வேறொரு பாட்டுப் பெற்றிலம் என்றும் தலைவனை ஆரத்தழுவி உடனுறைய விரும்பும் ஒரு நல்லாள் பள்ளிமேல் உடனுறைந்திருக்கும் அமையத்தில், பூப்பு வந்துற்றது அறிந்த நெஞ்சு கலங்குவள்; இவ்வுடற்கூற்றால் காதலனைச் சின்னாள் அகலவேண்டுமே என்று, துண்டிக்கும் வாள் என வைகறையைப் பழிப்பள்; தோள் தோய் காதலரைப் பிரிக்கும் என்ற அடையினால், பூப்பு வந்த போது இருவரும் இருந்த கூட்டுநிலையைக் குறிப்பிடுவள். ஆராவேட்கையும் நனிதானமும் இப்பாட்டிற் பொலிகின்றன. ஆண்பாற் புலவர்க்கு இன்னதொரு பெண்ணுள்ளம் பாடத் தோன்றாது காண். .

4. ஆலங்குடி வங்கனார்.

இவர் பாடல் ஆறும் மருதத் திணைக்கு உரியனவே. பரத்தை கூற்றாவன மூன்று தோழி கூற்றாவன மூன்று. மருதம் பாடிய புலவராதலின், ஐந்து பாடல்களுக்கு உள்ளுறை வைத்துள்ளார்.

வங்கனாரின் பாடலில் அன்பும் பெருமிதமும் தலைமையும் உடைய பரத்தை மாதுகளைக் கற்கின்றோம். நீயின்றி எனக்கு வாழ்வுண்டோ? சோழரின் அவையத்து அறமாறியதில்லை; அது போல் கெடுவறியாய் என் நெஞ்சத்தானே' (நற். 400) என்று கற்புடைமை விளம்புவாள் ஒரு பரத்தை. ‘என்னை வெறுப்பதற்கு இவள் யார்? அவள் வெறுத்தாலும் நாம் அது செய்யாம்' என்று இளமையில் துடிக்கின்றாள் ஒரு பரத்தை (அகம் 106) -

ஐந்திணைக்கண் வரும் தோழி ஓராற்றலை தலைவியின் கருத்து வாயில், தோழி பாடல்கள் தலைமகளின் எண்ணத்தையும் விருப்பத்தையும் பளிங்குப்படுத்துவன. வங்கனார் பாடும் தலைவி கணவனின் ஒழுக்கப் புறம்போக்கை நன்கு தெரிந்தவள். அவன் எவ்வளவும் தவறுக, தவறினும், தன் கடமையில் தவறாதவள் தன் இல் லறக் கடன் குடும்பப் பொறுப்பும் குழந்தைப்பேறும் என அறிந்தவள்.

யாணர் ஊரநின் மாணிழை மகளிரை. -
எம்மனைத் தந்துநீ தழிஇயினும் அவர்தம்
புன்மனத் துண்மையோ அரிதே அவரும்
பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து
நன்றி சான்ற கற்போடு

எம்பா டாதல் அதனினும் அரிதே (நற்.330)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/296&oldid=1394734" இலிருந்து மீள்விக்கப்பட்டது