பக்கம்:தமிழ்க் காதல்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

தமிழ்க் காதல்



மாசாத்தியாரின் புலமைக் கற்பனைக்கு இஃது ஒர் காட்டு போர் முடித்த தலைவன் தேர் ஏறினான். உடனே பாகன் வீடு வந்து சேர்ந்தோம் இறங்குங்கள் என்று கூறினான். தலைவன் மருண்டான். இடைப்பட்ட நெடுந்தொலைவை, பாகா எப்படிக் கடந்தாய்? நீ தேருக்குக் குதிரையாகப் பூட்டியது காற்றா? நின் நெஞ்சமா? என்று வினவி, மனைவியை விரையக் காணும் வாய்ப்பளித்து பாகனைக் தோளோடு தோள் தழுவினான். 'ஏறியது அறிந்தேன். இப்போது இறங்குவது அறிவேன்' என்று பாகாற்றலைப் பாராட்டினான். “எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்” என்ற கம்பரின் கற்பனைக்கு சங்க மூலம் உண்டு, அம்முலவர் மாசாத்தியார் ஆவர்.

இரண்டாம் பதின்மர்

11. ஓதலாந்தையார்


நூற்றுக்கும் மேல்ான அகத்தொகை பாடியவருள் ஒருவர் ஒதலாந்தையார் இவர் யாத்தவை 103 அகங்கள். அம் மூவனாரைப் போல இவரும் புறம் பாடாப் புலவர் தலைவன் 35, தோழி 25, தலைவி 19, நற்றாய் 13, கண்டோர் 7, செவிலி 2, அந்தணர் 1, அயலோர் 1 என்ற கூற்று வகையில் பாடற்றொகை அமைந்துள்ளது.களவிற்கு உரியன38; கற்பிற்கு உரியன 65. களவில் பாங்கனுக்கு இவர் இடம் கொடுக்க வில்லை. கற்பில் தலைவன் தோழி தலைவி மூவருமே இடம் பெறுப. பாலைத்துறைகளைப் பலபடவும் பண்படவும் இலக்கியம் தொடுக்கும் இவர் உடன்போக்குத் துறைகளை ஆளுவதில் நிகரற்று விளங்குகின்றார். தாயின் புலம்பல்களை யாரினும் சிறந்து உணர்த்துகின்றார்.

உடன்போக்கும் பாலையும்

களவில் உடன்போக்கு பாலையாவது எங்ங்ன்? தலைவனும் தலைவியும் உடன்செல்லும் நிலையைக் குறிஞ்சி என்றன்றோ கூறவேண்டும்? அன்னோர் செல்லும் வழி நிழலுடையது நீருடையது பூவுடையது இளவேனில் நலமுடையது என்று புனையப்படுதலின், நிலத்தாற் பாலை, காலத்தாற் பாலை என்று கூறுவதற்கும் இல்லை. பெற்றோரைப் பிரிந்து செல்லுதலின் பாலையாயிற்று எனலாமோ எனின், புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற உரிப்பொருள்கள் தலைவனுக்கும் தலைவிக்கும் இடை நிகழ் வனவன்றிப் பிறரோடு தொடர்புடையன வல்லவே. பாலையாவது பிரிதலும் பிரிதல் நிமித்தமும். உடன்போக்கு பிரிதல் நிமித்தத்தின் பாற்படும். உடன்போக்கில் இருவரும் கூடியிருப்பினும், இன்னும் மணமாகாமையின், பிரிவோமோ பெற்றோரால் பிரிக்கப் 峦 ாமோ என்ற பிரிவுணர்ச்சி இருவர்தம் உள்ளத்தும் ஒடிக் கொண்டிருக்கும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/307&oldid=1394747" இலிருந்து மீள்விக்கப்பட்டது