பக்கம்:தமிழ்க் காதல்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

தமிழ்க் காதல்



கருப்பொருள் கொண்டு உள்ளுறை அமைப்பது இலக் ஒரு அருமையாகும். அவ்வருமை ஒரம்போகியார்க்கு எளிமையாக, காண்கின்றோம். இரண்டடிகளில் உள்ளுறை கர்ட்டித் தொடுப்பது இவர்தம் யாப்பு முறையாகும்.

பூத்த க்ரும்பிற் காய்த்த நெல்லிற்
கழனி யூரன் மார்பு (ஐங். 4)
கரும்புநடு பாத்தியிற் கலித்த ஆம்பல்

சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊர (ஐங். 65)

இல்லக்கிழத்தியின் கடமைகளை இவ்விரண்டு உள்ளுறைகளில் அமைப்பர் புலவர். மகப்பெற்றுக் குடும்பவழியை அடையாது காக்கின்றாள் தலைவி என்பதும், “காய்த்த நெல்’ என்னும் கருப்பொருளாற் பெறப்படும். விருந்தினர்களை ஏற்று இல்லறம் 'செய்வாள் என்பது, ஆம்பல் வண்டின் பசியைப் போக்கும் என்ற புனைவாற் பெறலாம். கடமைகள் என்பன பரத்தையர்க்கு இல என்பதனைச் சுட்டித் தலைவனை இடித்துரைப்பது இவ்வுள்ளு றைகளின் நோக்கம், -

உள்ளம்போகி

ஓரம்போகியார் காட்டும் தல்ைவன் பரத்தையொழுக்கத்திற் பெரிதும் உள்ளம் போகியாக விளங்குகின்றான். நண்டு முதலே நீர்நாய் நாரை ஆமை எருமை இவை தலைவனது இழிபெருங் காமத்திற்கு உவமமாக விளங்குகின்றன.திருமணஞ் செய்து கொண்ட சில நாளைக்குள் பரத்தனாகின்றான் ஒரு தலைவன். நெடுந்தொலை பிரித்துபோய் மீண்டுவந்த சின்னாளில் பரத்தமை எய்துகின்றான் ஒருவன். பரத்தையருள்ளும் ஒருத்தியை விட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகிச் செல்கின்றான் ஒருவன். பரத்தையர் மனைக்கண் பன்னாள் தங்கி விடுகின்றான் ஒருவன். புறவொழுக்க அடையாளங்களோடு வீடு வருகின்றான் ஒருவன்.

மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்
வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண்ட டான்கொல்
அன்ன தாகலும் அறியாள்

எம்மொடு புலக்குமவன் புதல்வன் தாயே (ஐங். 90)

இவ்வாறு தலைமகனது தண்டாப் பரத்தமையை ஒரு பரத்தையே வியக்கின்றாள். அவனது ஒழுக்கமிகை அவளுக்கும் பொறுக்க வில்லை. நல்லவன் ஒரு நொடியிற் கெடலாம்; கெட்டவன் ஒரு நொடியில் நன்கு திருந்தலாம். எல்லாம் மனிதன் நினைப்பு வயத்தது. கையில் ஒரு காசு இருக்கும் வரை, கடன் வாங்கியும் செலவழிக்கலாம் என்ற வழி இருக்குவரை, வாழ்க்கைத் திருப்பம் பலர்க்குத் தோன்றாது, இடைநடுவில் அறிவோடு பலர் திருந்தார். பந்து போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/311&oldid=1394751" இலிருந்து மீள்விக்கப்பட்டது