பக்கம்:தமிழ்க் காதல்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

301



13. ஒளவையார்

நாடறிந்த தமிழ்ப் புலமையாட்டி ஒளவையார். இவர் புறம்பாடுவதில் வல்லவர் என்பதனைப் பலர் அறிகுவர். இவர் தம் புறப்பாடல்கள் 33; அகப்பாட்டுக்கள் இருபத்தாறே. களவிற்கு உரியவை 8; கற்பிற்கு உரியவை 18 அகம்பாடுவதிலும் வல்லுநர் ஒளவையார் என்பதனைக் கூற விரும்புகின்றேன்.

அகத்தின் பல்துறைகளிலும் ஒளவையார் பாடியிருப்பினும், களவிலும் கற்பிலும் தலைவியரின் பிரிவுத்துயரை எடுத்துக்காட்டும் தனித்திறம் வாய்ந்தவராக விளங்குவர். இவர்தம் அகத் தலைவி அடக்கவாராக் காமவேட்கைப் பட்டவர். எம் காமம் வானளவு உயர்ந்தது; என் காதலன் அதனை முற்றத் தணிக்கவில்லை (குறுந் 102) என்று கிழத்தி வெளிப்படையாக மொழிவள். தலைவன் வெளியூர் செல்லல் ஆகாது என்று வம்பு செய்தாள் என்றும்,அதனால் சொல்லிக் கொள்ளாமலே அவன் பிரியநேர்ந்தது என்றும் ஒரு பாடல் தொடுக்கின்றார் ஒளவையார் (குறுந் 43), மனைவியது காமச் சுரப்பைக் கணவன் அவ்வளவு உணர்ந்தவனாகத் தெரியவில்லை. “தாம் வினைமுடித்து வரும்வரை நாம் வாழ்ந்து கொண்டிருப்போம் என்று அவர் தவறாகக் கருதுகின்றார். ஒருநாள் அவர் இல்லாது கழியின் உயிர் கழியும் என்பதனை உணர்ந்திலரே” (நற். 129) என்பது தோழியின் அறிவிப்பு. -

அகத்திணை உருவகம் - தலைவி மெய்ம்மலி காமத்தள்; தலைவனுடன் சென்று கையனை முயக்கம் விழைபவள் தலைவன் இருக்கும் இடத்திற்குச் சென்றேனும் இன்புறும் துடிப்பினள். வழிகள் மயங்கிய நெடுந்தொலை நடந்தேனும் வெள்ளிவீதியைப்போலக் காதலனைக் காணப் புறப்படுவேன் என்று (அகம்.147) துணிகின்றாள் ஒரு நங்கை "அழிநீர் மீன் பெயர்ந்தாங்கு வழிநடைச் சேறல் வலித்திசின் யானே' (அகம். 303) என்பது கற்புடை நங்கையின் காமச்சொல். மீனு வமம் மிகப் பொருத்தம் உடையது. நீர் நீங்கின் மீன் நீங்கும், நீருள்ளவிடத்தை நாடிச் செல்லும். அதுபோல் காமக்காதலி காதற் கணவனைத் தேடிப் புறப்படத் துணிகின்றாள். தலைவனுடன் போகவேண்டும் அல்லது அவன் போய இடத்திற்குத் தனித்துப் ப்ோகவேண்டும் என்ற உள்ளக்கிடக்கையுடையவளாகத் தலைவி யைப் புனைந்து காட்டும் திறலினை ஒளவைப் புலமையில் காண்கின்றோம்.

தலைவரம் பறியாத் தகைவரல் வாடையொடு
முலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத்திறன் நீடி

ஊரோர் எடுத்த அம்பல் அஞ்சினை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/314&oldid=1394756" இலிருந்து மீள்விக்கப்பட்டது