பக்கம்:தமிழ்க் காதல்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

303



பரத்தை யாயம் கரப்பவும் ஒல்லாது
கவ்வை யாகின்றாற் பெரிதே காண்தகத்
தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்
கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருதுதற் குறுமகள் அணிநல்ம் வவ்விய
அறனி லாளன் அறியேன் என்ற
திறனில் வெஞ்சூள் அறிகளி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த் ஞான்றை

வீறுசால் அவையத் தார்ப்பினும் பெரிதே (அகம். 256)

“ஒர் இளைஞன் கள்ளூர் நங்கையைக் களவிற் காதலித்துப் புணர்ந் தான். பின்னர் அவளை அறியேன் என்று அறம் பிறழ்ந்து வாதிட்டான் ஊர்ப் பெருமக்கள் உண்மையை ஆராய்ந்து அவனுக்குக் கடுந்தண்டனை விதித்தனர். மரக்கிளையில், அவனை கட்டிவைத்துச் சுண்ணாம்பு நீற்றினை ஊற்றினர்.அப்போது பேராரவாரம் எழுந்தது” எனக் கயவனது காதலை உவமை வாயிலாக வெளிப்படுத்துவர் மள்ளனார். அக்கயவனுக்கு எழுந்த ஆர்ப்பரிப் பினும் தலைவன்மேல் எழுந்த அலர் மிக்கது, எல்லார்க்கும் கேட்பது என்று பாடுவர்.

ஒளவையாரும் பரணரும் காமச்செயல்களை உவமிக்கும் போது, ஆட்பெயர்களைச் சுட்டிப் பாடியதை அறிவோம். கள்ளுர்க் குறுமகள் எனவும் அறனிலாளன் எனவும் பொதுப் பட மள்ளனார் பாடுதலைக் காண்க. காதல் வ்ழிப்பட்ட ஏற்றங்களைத் தேர்ந்து தெளிந்து முறைசெய்தற்கு ஆற்றலுடைய நிலையம் இருந்தது என்பதனை வீறுசால் அவையம் என்ற தொடராலும், இத்தகைய தண்டனைகளை ஊரறிய நிகழ்த்தினர் என்பதனை ஆர்ப்பினும் பெரிது என்ற தொடராலும் அறியலாம். நினைத்த அன்புக் காதலியை எய்த முடியாதபோது இளைஞன் மடல்மா ஏறி மன்றத்திற்குச் சென்று சான்றோர்முன் தன் வழக்கை எடுத்துரைப் பான் என நெய்தற்கலிகள் (139-141) துவலுகின்றன. இதனால் தமிழ்ச் சமுதாயத்தில் காதல் காக்கும் நிலையங்கள் ஊர்தோறும் நிலவின. என்பது வெளிப்பட்ை - - -

15. கந்தரத்தனார்

இப்புலவர் யாத்த அகங்கள் எட்டு, களவிற்கு உரியவை மூன்று: கற்பின் மேலான ஐந்து. தலைவியின் நற்றாய் களவியலில் மிகுதியாக இடம்பெறுவது உண்டு. வெறியாட்டு அறத்தொடு நிற்றல் உடன்போக்கு என்ற துறைகளில் அன்னை பாடல் பெறுவாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/316&oldid=1394758" இலிருந்து மீள்விக்கப்பட்டது