பக்கம்:தமிழ்க் காதல்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

305



அன்னை அடங்கியிருத்தலும் எல்லாம் நிகழா என்று தெளிக. ஆதலின் களவுத்துறையாக அகநானூற்று உரையாசிரியர்கள் பொருள் முடித்திருப்பது பிழையாகும்.

களவியலில் வரும் அன்னைக்கும் கற்பியலில் வரும் அன்னைக்கும் பாடுபெறு முறையில் ஒரு வேறுபாடு உண்டு. நற்றாய் கூறியது என நேர்கற்றாகக் களவிற் பாடலாம்."ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்” (அகம். 35) என ஒரு நற்றாய் கூற்றாக அம்மூவனார் பாடுவர். இன்ன பாடல்கள் பலவுள. கற்புத் திணையிலோ அன்னை பிறர்கூற்றில் வைத்துச் சுட்டப் படுவாள் என்று அறியக் கிடக்கின்றது. கந்தரத்தனார் பாடல் தலைமகள் கூற்றாகும் கல்லாட நக்கீரனார் பாடல்கள் தோழி கூற்றுக்கள்.

விளங்கிய தலைமக்கள்

கந்தரத்தனாரின் தலைமக்கள் ஒருவரை யொருவர் புரிந்து கொண்டவர்கள். தலைவன் பிரிந்து போவதற்குத் தலைவி உடன் படுகின்றாள். பொருளின் பொருட்டுப் பிரிந்து போவதா எனத் தலைவனும் ஓர்கின்றான். அறல் மணல் போல விரிந்து நெளிந்து ஒடிய கருங்கூந்தலைக் கொண்ட மனைவி ஆற்றியிருப்பாள் ("ஒலியிருங் கூந்தல் தேறும்” அகம் 191)என அவனது நெஞ்சம் அவனுக்குத் தேறுதல் மொழியக் காண்கின்றோம். தலைவன் செல்லும் நெறி பாலைமை யாயிற்றே என்று ஒருகால் அவன் கலங்கினாலும், அவன் குறித்த காலம் வரை ஆற்றியிருக்கும் . பெற்றியளாக விளங்குகின்றாள்.

அனையகொல் வாழி தோழி மனைய
தாழ்வில் நொச்சி சூழ்வன மலரும்
மவ்வல் மாச்சினை காட்டி

அவ்வள வென்றார் ஆண்டுசெய் பொருளே (அகம், 23)

வேற்றுார் செல்லும் தலைவன் தான் திரும்பிவரும் காலத்தைச் சொல்லாற் சொல்லவில்லை. நொச்சி மரத்தின் கிளையில் சுற்றிக் கொண்டு கிடக்கும் முல்லைக்கொடியைத் தலைவிக்குக் காட்டி, அங்குப் பொருள் ஈட்டுங்காலம் அவ்வளவு நாள் தான் என்றான். முல்லை மலரும் காலமாகிய கார்ப்பருவத்தில் வந்துவிடுவேன் என்பது குறிப்பு. இக்குறிப்பு நாடகமுறைக்கு உரிய மெய்ப்பாடாகும். அக்கால வரம்பிற்குள் ஈட்ட முடிந்த பொருள் எவ்வளவு அவ்வளவினைக் கொண்டு திரும்பிவிடுவான் தலைவன் இத்துணை ஈட்டவேண்டும் எனப் பொருள் வரம்பு வைத்துக் கொள்ளவில்லை. அவ்வரம்பு கொள்ளின், காலம் நீட்டிக்குமன்றோ, ஆதலின் காலவளவே பொருளளவு என்று மனைவியின் காதலை மதித்துக் கூறுகின்றான் தலைவன். அதுபோலவே கார்காலம் வரக்கண்டதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/318&oldid=1394760" இலிருந்து மீள்விக்கப்பட்டது