பக்கம்:தமிழ்க் காதல்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

321


செய்தி. இங்ஙனம் கற்பியலில் உடன் போக்கிற்குத் தலைவர்கள் இசைந்தார்கள் என்று பாடுவதைக் கற்கின்றோமேயன்றி, இருவர்தம் உடன் போக்கையும் நேர்படக் கூறிப் புனைந்த பாடல் சங்க விலக்கியத்தில் இல்லை காண். r -

உயர்கரைக் கான்யாற் றவிரறல் அகன்துறை
வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத்
தொடலை தைஇய மடவரல் மகளே
கண்ணினும் கதவதின் முலையே

முலையினும் கதவநின் தடமென் தோளே (ஐங். 361)

என்பது ஒதலாந்தையார் பாட்டு, களவில் உடன்போகும் தலைமகன் தலைவி பூத்தொடுப்பதைப் பார்த்துப் புகழ்கின்றான். புகழ்ச்சிக்கு நாணி அவள் கண்ணைப் பொத்திக் கொண்டனள். நின் கண்ணினும் எனக்குக் காதல் வெம்மையை விளைப்பன நின் கொங்கைகளே என்று மேலும் பாராட்டினான். அவற்றையும் அவள் மறைத்துக் கொள்ளவே மறைக்க இயலாத் தோளழகை வியந்தான். இங்ங்னம் களவின் உடன்போக்கைக் குறித்த நேர்முகச் செய்யுட்கள் உள; கண்டார் கூற்றுக்களும் உள. "புணைர்ந்துடன்போகிய கிழவோள்' (1093) என்று இக்களவுச் செலவைத் தொல் காப்பியரும் சுட்டுவர்.

மணமனை கமழும் கானம் - -
துணையீர் ஒதியென் தோழியும் வருமே (அகம். 107)
குவளை யுண்கண் இவளும் நம்மொடு
வரூஉம் என்றனரே காதலர்
வாராய் தோழி முயங்குகம் பலவே (அகம். 285)
அருஞ்சுரம் அரியவல்ல..
குவளை யுண்கண் இவளொடு செலற்கென

நெஞ்சுவாய் அவிழ்ந்தனர் காதலர் (அகம். 129)

முதலிரண்டும் காரிக் கண்ணனார் செய்யுட் பகுதிகள். மூன்றாவது கீரத்தனாரின் அடிகள். கற்பொழுக்கத்தில் மனைவி உடன்போக விரும்பினாள் தோழி தலைவனுக்கு அறிவித்தாள், நல்லது இனியது என்று அவனும் அழைத்தேகுவதாகச் சொல்வினான் என்று பல பாடல்கள் உள. சொல்லிய வண்ணம் செய்யாது சென்றுவிட்டான் என்றும், உடன் கொண்டு சென்றிருப்பின் என்ன உவப்பு அவனுக்கு இருக்கும் என்றும் தலைவி இல்லிலிருந்து இரங்கும் ஏக்கப் பாடல்களும் உள (குறுந் 79; அகம் 11) இடைச்சுரத்துச் செல்லும் தலைவன் அவளைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே என்றோ, வராதிருந்தது நல்லதாயிற்று என்றோ எண்ணிய பாடல்களும் உள (அகம், 79; குறுந் 56) இவ்வகையன்றிக் கற்பில் உடன்போக்கு நிகழ்ந்ததாகச் செயல்மேல் வைத்து யாரும் பாடியிருப்பக் காணோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/334&oldid=1394790" இலிருந்து மீள்விக்கப்பட்டது