பக்கம்:தமிழ்க் காதல்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

தமிழ்க் காதல்



களவிலும் கற்பிலும் தலைவியின் வருத்த வுணர்வுகளை ஐந்திணையின் எல்லை எவ்வளவு அவ்வளவிற்குச் சென்று நல்லந்துவனார் புனைவர் எனினும் பெருந்திணைக்கோட்டினைத் தொடாவாறு நிறுத்திக் கொள்வர். இஃது இவர்தம் புலமைப்பாடு நாணுடை ஐந்தினைத் தலைவியரே காமக் காழ்ப்பால் நாண் துறந்தபோது, பெருந்திணைப் பெண்டிராகி விடுவர் என்ற திணைத் தன்மையை முன்னர்த் தெளிந்திருக்கின்றோம்.

காம நாணம்

நாண் இருவகைப்படும். ஒருவகை நாண் பெண்பாலாராகிய மெல்லியலார்க்கு உரியது; பெண்மையோடு பிறந்தது ஆடவர்தம் காம எழுச்சிக்குத் தூபமாவது. இதனை நாணம் என்ற வழக்கில் கூறுகின்றோம். இந்நாணமில் நங்கை இன்பத்துக்குப் பகையாவாள்; ஊடலுக்கு ஊற்றாகாள். நாண்மிகுதி பெண்மையை மிகுத்து முடிவில் இன்பத்தை கனிவிக்கும். "நானொடு மிடைந்த கற்பின் வாள்துதல்” (அகம், 9) என்பர் கல்லாடனார்.

நானும் உட்கும் நண்ணுவழி அடைதர
ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவை.இ

ஆகம் அடைய முயங்கலின் (குறிஞ்சிப். 184)

நம்பியின் ஆராத் தழுவலுக்கு நங்கையின் நாணச்சம் ஏது வாயிற்று என மொழிவர் கபிலர். பருவமுதிர்ச்சியாலும் ஈர்ப்பு நாணம் குன்றிப் போகும். காமத்தின் வலியும் சுவையும் தளர்ந்து போம். இப்பெண் நாணம்-காமநாண் அகத்ணையிலக்கியத்தில் நயமாகப் பாடுபெறுகின்றது. பாடு பெறுவது இயல்பும் ஆகும்.

ஒழுக்க நாணம்

மற்றொருவகை நாண் மனிதவினத்துக்குப் பொதுவாவது, சமுதாய நலத்துக்கு உறுதுணையாவது. ஆணாயினும் பெண்ணாயினும் அன்னவர் பண்பினை மிகுப்பது. நாணுடைமை என்ற திருக்குறள் அதிகாரத்துச் சுட்டப்படுவது இந்நானே. “கருமத்தால் நாணுதல் நானுத் திருதுதல் நல்லவர் நாணுப் பிற” (101) என்று திருவள்ளுவர் இருவகை நாணங்களையும் எடுத்துக் காட்டுவர். தலைவன் திருமண வரைவை நீட்டிக்கும் போதும் ("நாணுத் தக்கன்று” நற். 72) பரத்தைமையில் உழலும் போதும் (பெரிய நாணைச் சுட்டிக்காட்டி ஆடவனை இடித்துரைக்கக் காண்கின்றோம். இவ் வரம்புநாண் களவிற்கும் கற்பிற்கும் எல்லா அகமாந்தர்க்கும் பொது. இந்நாண் ஐந்தினைத் தலைவி.பால் அடங்கி நிற்கும் என்றும், பெருந்தினைத் தலைவி.பால் கடந்தோடும் என்றும் அந்துவனார் பாடல்கள் அறிவுறுத்துவ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/345&oldid=1394803" இலிருந்து மீள்விக்கப்பட்டது