பக்கம்:தமிழ்க் காதல்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

335



வாலிழை மகளிர் உயிர்பொதி யவிழ்க்கும்
காலை யாவது அறியார் -

மாலை என்மனார் மயங்கி யோரே (கலி. 119)

“இது மாலைக்காலமே இல்லை; புணர்ச்சியில் மயங்கிக் கிடப்பவரே மாலை என்று கூறுவார்காண். மலர்களை விரிக்கும் காலம் ஒன்று உண்டுபோல, மகளிரது உயிர்களை உடம்பினின்றும் பிரிக்கும் இறுதிக்காலம் ஒன்று உண்டு. அதுதான் இக்காலம்” என்று மாலைப் பொழுதுக்கு ஆற்றாத அரிவை ஒரு புதிய காலம் படைக்கின்றாள். தான் தெளிந்தவள் போல, மற்றையோரை மயங்கியோர் என்று துாற்றுகின்றாள். இத்தகைய நெய்தற்கலிகளில் பிரிவுத் தலைவியரின் அழுக்காறுகளை, கூடியிருப்பார் மேற்கொண்ட பொறாமைகளைக் காண்கின்றோம். - r"

பெருந்திணைப் புலவன்

நல்லந்துவனார் ஒருவரே சங்கபனுவலில் பெருந்திணைப் பாடல்கள் யாத்தவர். ஐந்தினைத் தலைவயரின் பிரிவுணர்ச்சிகளை எல்லைக்கோடளவும் சென்று பன்மானும் பாடவல்ல புலவர்க்கே பெருந்தினை பாடும் எண்ணமும், பாடவல்ல எளிமையும் ஏற்படும். களவியலில் மடல் ஏறிவரும் தலைவனது நாணில் செயலையும், கற்பியலில் ஊரறிய வெளிவந்து உற்ற பெருங் காமத்தை உரைத்துத் திரியும் மனைவியின் நாணில் செயலையும் பொருளாகக் கொண்டு பெருந்தினை பாடினர் அந்துவர். தன்மேல் விருப்பம் இல்லாக் குமரியை நச்சி ஒருவன் மடலூர்வது இல்லை. விருப்பம் ஒத்த நல்லாளை மணப்பதற்கே ஊரறிய மடல் ஏறுகின்றான் ஆதலின், அன்பின் அகத்திணையாம் என அறிக. கணவன் அல்லாத ஒருவன் மேற்கொண்ட காமக்கனிவால் ஒர் இல்லாள் புறம்போந்து புலம்புவது இல்லை. மணந்த ஆடவனது பிரிவு பொறாது வளர்ந்த மெய்ச்சுரத்தால், ஊரறியக் காமர்பறை சாற்றுகின்றாள். ஆதலின், அன்பின் அகமேயாம். முன்னது களவிற் பெருந்தினை; பின்னது கற்பிற் பெருந்திணை. நாணில் காமத்தால் பெருந்திணையாயிற்று எனவும், அன்பு ஒத்த காதலால் அகத்திணையாயிற்று எனவும் தெளிக. எனவே அன்பும் நாணமும் ஐந்திணையும் என்றும், அன்பும் நானமின்மையும் பெருந்திணையாம் எனவும் வேறுபடுத்தி உணர்க. ஐந்திணைக் க்ாதலர் போலப் பெருந்திணைக் காதலர்களும் அன்புடையார், கற்புடையார், ஐந்திணைக்கு இல்லாத பெருந்திணைக்கே உரிய இலக்கணம் நாணமின்மை. எனினும் நீங்கிய நாணத்தை மீளப் பெற்றுப் பெருந்திணையர் ஐந்திணையராக நல்வாழ்வு வாழலாம். சமுதாயப் பழி யாதும் இல்லை. இவ்வுண்மைகளை யெல்லாம் அந்துவனாரின் பத்துப் பாடல்கள் விளங்கக் காட்டுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/348&oldid=1394806" இலிருந்து மீள்விக்கப்பட்டது