பக்கம்:தமிழ்க் காதல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை ஆராய்ச்சி

21


அகத்திணை ஆராய்ச்சி 21 எந்நெறி நாடினால் பாடியோன் கருத்துச் சிறக்கும்? என்பதுபற்றிய அறிவை, இத் துறை நயங்கள் நமக்குக் கற்பிக்க வல்லன. “இந்நூல் போலவே நடையாலும் பொருள் நுணுக்கத்தாலும் இவ்வுரையும் மிகப் பாராட்டற் பாலது. இவ்வுரை இல்லையாயின், இந்நூற்பாக்களிலுள்ள உள்ளுறையுவமம் முதலியனவும் மற்ற அருமை பெருமைகளும் நன்கு புலப்படா. பழைய உரையில்லாத செய்யுட்களுக்கு உள்ளுறையுவமம் முதலியவற்றைப் புலப்படுத்தி ஏதோ ஒரு வகையாக உரையெழுதி இதனுடன் பதிப்பிக்கலாம் என்ற விருப்பம் சில சமயம் எனக்கு நிகழ்ந்ததுண்டு; நிகழ்ந்தும் இந்நூலையும் இவ்வுரையையும் உற்றுநோக்க அவ்விருப்பம் அடியோடே மாறிவிட்டது” என்று பதிப்பாசிரியர் டாக்டர் உ.வே.சா. மொழிகுவது இவ்வுரைக் குறிப்பின் தனித்தன்மைக்கு ஒரு பாராட்டு. பிற நான்கு அகத்தொகையிலும் காணப்பெறாத் தனிக் கூறு கலித்தொகையில் காணத் தகும். அகத்தினையாவது கைக்கிளை ஐந்தினை பெருந்திணை என எழுபாற் படுவது. ஐந்திணைக்குரிய பாடல்களே ஏனைத்தொகையில் உள. ஏழு திணைக்குரிய பாடல்களையும் கொண்டிலங்குவது கலித்தொகையே. கைக்கிளை பெருந்திணைச் செய்யுட்கள் சங்க விலக்கியத்து மிகச்சில. அச்சில தாமும், கலித்தொகை ஒன்றிற்றான் காணப்படுவ. அகத்திணை மாந்தர்களின் இனிய இன்னா உணர்ச்சிகளையும் உரையாடல் களையும் உள்ளங்கிளருமாறு இலக்கியப்படுத்தற்குக் கலிப்பாவின் துள்ளொலி மிக இசைவதாகும். ஏறு தழுவி வரைந்து கொள்ளுதல் என்னும் முல்லைத் துறைப் பாக்கள் கலித்தொகையிலன்றிப் பிற தொகை நூல்களில் காணுமாறில்லை. வெறியாட்டு, மகட்போக்கிய தாயிரங்கல் என்ற துறைப்பாக்களோ கலித்தொகையில் இல்லை. பரிபாடல் இருபத்திரண்டு பாடல் கொண்ட தொகை நூல். இவை தெய்வம், காதல், நீர்விளையாட்டு என்றின்ன சில பொருள் பற்றியவை. இவற்றுள் 6,7,10, 1, 12,14,16, 20 என்ற் எண்ணுடைய எட்டுமே அகப் பரிபாடல்கள். இவை 32-140 அடியெல்லை கொண்டவை. அகநானூற்றுப் பாடல் 31 அடியோடு முடிவது என்பது ஈண்டு நினையத்தகும்.வைகைப் புதுப்பெருக்கையும், நீரோட்டத்தையும், வகை வகையான காதலர்தம் ஊடல் விளையாட்டையும், நீளத் தொடுத்தற்குப் பரிபாடலின் அடி நீட்சி வேண்டற்பாலது. மருதத்திணை பெரும்பாலான அகப் பரிபாடல்களின் உரிப்பொருளாம். > - பத்துப்பாட்டு நூலில், அகஞ் சார்ந்தவை நான்கே. முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை என்ற இந்நான்கும் 101-30 அடிக்கு உட்பட்டவை. குறிஞ்சிப்பாட்டு நிரல்பட இனிதாகக் களவொழுக்கத்தை விரித்துச் _5.2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/35&oldid=1237132" இலிருந்து மீள்விக்கப்பட்டது