பக்கம்:தமிழ்க் காதல்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

தமிழ்க் காதல்


பாடினனா? களவை முன் பாடினனா? வரவை முன் பாடி, இயற்கைப் புணர்ச்சியைப் பின் பாடினனா? வினைமுற்றிய தலைமகனது வரவைப் பாடியபின், பிரிந்த தலைவியின் துயரைப் பாடினனா, துறை முன்பின் நாம் அறியோம். இவ்வுண்மையைப் புலப்படுத்தும் நோக்கோடுதான், அகத்தொகை செய்தோர் ஒரு புலவரின் பாடல்கள் ஒருசேரத் தொகுத்துக் காட்டவில்லை; துறை நிரல்பட வைத்துக் காட்டவில்லை. ஒரு தொகைக் கண்ணுங் கூட அடுத்தடுத்து வைக்கவில்லை. மிளைப்பெருங் கந்தனார் தலைமகன் பாங்கற்கு உரைத்தது, தலைமகனுக்குப் பாங்கன் உரைத்தது என்ற துறைத் தொடர்பில் இரு பாடல்கள் யாத்தார். இவை இரண்டும் குறுந் தொகையில் உள. எனினும் அடுத்தடுத்து இல்லை. தலைமகன் உரைத்தது 136 ஆம் செய்யுளாகவும், பாங்கன் உரைத்தது 204 ஆம் செய்யுளாகவும் இடம் பெற்றுள்ளன. யார் உரைத்தது முன் என்று யார் அறிவார்? தமிழ்க்காதல் என்னும் இந்நூலைக் கற்பவர் இவ்விளக்கத்தை யாண்டும் மறவாது போற்றிக் கற்க வேண்டும்.

காதற் கற்பு

இளநாகனாரின் திணைத்தலைவி தலைவனது பெரும் பரத்தமை எவ்வளவு அவ்வளவினையும் பொறுக்கும் இல்லற திலகமாக விளங்குகின்றனள். பரத்தைக் குறியொடு வரினும் அவன்பால் உள்ளம் நெகிழ்ந்து ஏற்கின்றனள். ஆண்டிற்கு ஒரு முறை ("ஒர் யாட்டு ஒரு கால்வரவு” கலி.71) வரினுங் கூட மழை வரவுபோல அவன் வரவை மதிக்கின்றனள். தலைவன் வருவதற்கு முன்னே அவன் வரவை உடன்படலாகாது, நெஞ்சம் இளகலாகாது என்று பாடஞ் செய்து கொண்டிருப்பினும், அவனைக் கண்டதும், தன் கடனை உணர்கின்றாள்; அவன் குற்றத்தை மறக்கின்றாள். கணவனது ஒழுக்க நிலை இப்படி இருப்பதற்காக, நாம் என் செய்வது என்பது அவள் கருத்து.

மாய மகிழ்நன் பரத்தைமை

நோவேன் தோழி கடன்நமக் கெனவே (கலி. 75)

தலைவனது இழிவுப் போக்கை உணராதவளும் அல்லள். அவனது பொய்க்கு ஏமாறுபவளும் அல்லள். அவன் ஒழுக்கத்தன் என்று தன்னை ஏமாற்றிக் கொள்ளுபவனும் அல்லள் அவனை ஏற்று இன்புறல், இன்புறுத்தல் தன் கடன் என்ற ஒரறத்தையே கடைப் பிடிப்பவள். இளநாகரின் மருதக் கலியில் பரத்தையர்க்கு முதன்மை "யில்லை. தலைவனது பரத்தமைக்கு முதன்மையில்லை. அனைத் தையும் பொறுத்துத் தாங்கி அவனை அணையும் தலைவிக்கே முதன்மை, மருதக் கலிகள் சுரிதகத்தில் குறிஞ்சியாக முடிவதைக் காண்க, கற்புடைய நங்கையின் காதற் கடமையைக் காட்டுவதற்கே மருதக்கலி வரைந்தார் புலவர் என்று தெளிக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/373&oldid=1394846" இலிருந்து மீள்விக்கப்பட்டது