பக்கம்:தமிழ்க் காதல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

தமிழ்க் காதல்


24 தமிழ்க் காதல் சங்க இலக்கியத்தில் களவுப் பாடல் இவ்வளவு, கற்புப் பாடல் இவ்வளவு, ஒருதுறைக்கு அமைந்த பாடல் இவ்வளவு என்றும், ஒரு புலவன் இயற்றிய பாடல்களுள் இவையிவை இவ்வளவு என்றும் எண்ணிச் செய்த ஆராய்ச்சி இது. இவ்வகைக் கணக்கு செவ்விய சில முடிபிற்கு வேண்டப்படும். தமிழ்மொழிக்கண் தோன்றிய அகப்பாடல்களில் இன்று தொன்மையானவை சங்க அகப் பாடல்களே. இவை முதன்முதல் எழுந்தவையல்ல. எனினும், அகத்திணையின் பொருட்பாங்கினைக் காட்டுக்களால் விளங்க அறிந்து கொள்வதற்கு இவையல்லது வேறு இலக்கியச் சார்பில்லை. அகவிலக்கணத்தில் ஒரு தெளிவு பிறக்க, அகவிலக்கியத்தை ஆராயவேண்டும். அகவிலக்கியத்தில் ஒரு தெளிவு தோன்ற அகவிலக்கணத்தை நாட வேண்டும். இங்கன் வித்தும் மரமும், மரமும் வித்தும் போல, இலக்கண இலக்கியங்களின் உறவிருத்தலின், இரண்டும் ஒரு நிலையில் வைத்து ஆராயப்பட்டாலல்லது அகத் தினைத் தெளிவு முற்றத் தோன்றாதாகும். ஆதலின், அகத்திணையின் பாகுபாடு, அகத்திணையின் தோற்றம், அகத்திணையின் குறிக்கோள் என முகற்கண் மூன்றியல் வகுத்துக் கொண்டேன். வகுத்து, ஐயங் களைந்து திரிபு அகற்றி, வழிவந்த பிழைத்தடங்களைப் புரட்டி, என் அறிவிற் பட்டாங்கு, அக்த்தினை நுண்மைகளைப் பன்மானும் புலப்படுத்த முயன்றுள்ளேன். சங்க அகப்பாக்கள் பின்னெழுந்தவையேனும், போதிய சான்றளிப்பன என்பது ஆராய்ச்சிக்கிடை விளங்கலாயிற்று. அகத்திணையாராய்ச்சி இலக்கியம் இலக்கணம் என்ற இரு நெறிப்படும். மேற்கட்டியாங்கு இலக்கிய நெறிப்பட்ட ஆராய்ச்சிக்குச் சங்கப்பாடல்களே தொன்மை சான்றவை. இலக்கண நெறிப்பட்ட ஆய்வுக்குப் பழம் பெருந் தொல்காப்பியம் உண்டு. இந்நூல்தானும் தமிழ் மொழியில் தோன்றிய முதல் இலக்கண நூலன்று என்பதும், இதுவரை கிடைத்துள்ள தமிழ் நூற்கெல்லாம் காலத்தால் முத்த முதன்மையுடையது என்பதும் நினைவு கொள்ளவேண்டும். தொல்காப்பியம் என் ஆய்வுக்குத் தனிப்பொருளன்றேனும் இன்றியமையாத பற்றுக் கோடாதலின், வேண்டுழி வேண்டும் நூற்பாக்கள் ஆளப்பட்டுள. - தொல்காப்பியத்தின் உரையாளர்கள் தன் உரைக்கிடையே சுட்டிப் போந்த அகத்திணைக் குறிப்புக்கள் சிலபல. அவற்றின் திறம் நாடிப் பொருந்துவன கொண்டுள்ளேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/38&oldid=1237137" இலிருந்து மீள்விக்கப்பட்டது