பக்கம்:தமிழ்க் காதல்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. அகத்திணைக் கல்வி


அகத்திணை என்பது தமிழர் கண்ட காதல் நெறி, தமிழ் மொழி ஒன்றிலே காணப்படும் காதல் இலக்கியம், ஞால மக்கட் கெல்லாம் உரிய காதல் வாழ்க்கையுமாம். ஆதலின் அகத்தினை யறிவு பெண்ணுக்கும் ஆணுக்கும் இன்றியமையாக் கல்வியாகும். நம் தமிழ் முன்னோர் அகக்கல்வியைச் செம்மையாகப் பெற்றிருந்தனர். அதனால் அன்னவர் இல்லற வாழ்வு பூசலின்றி இயங்கியது."பேரமர் உண்கன் இவளினும் பிரிக” என்று (புறம், 71) பூதப்பாண்டியனும், “வரைவின் மகளிர் மார்பிடை என் மிர்ன்ல படுக” என்று (புறம், 71) சோழன் நலங்கிள்ளியும் கூறும் வஞ்சினங்களில் அன்னோர் மனையன்பைக் காண்கிறோம். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பது பண்டை அரசியல் நெறி. வேந்தர்களே செவ்விய கணவன்மாராக ஒழுகியதால், மக்களின் மனை வாழ்வும் அன்று ஒழுங்குபட இலங்கியது. சங்ககாலத்து அகக்கல்வி பரவியது, பரப்பப்பட்டது, தமிழ் மக்களெல்லாம் அகவுணர்ச்சியாக வாழ்ந்தனர் என்பதற்கு வேறு சான்று வேண்டா. நானூறு புலவர்கள் அகச்செய்யுள் யாத்தனர் என்பது ஒரு சான்று. இரண்டாயிரம் அகச்செய்யுட்கள் யாக்கப்பட்டன என்பது மற்றொரு சான்று.நமக்கு கிடைத்துள்ள சங்கப்பனுவலிலிருந்து அறியப்படும் தொகைகள் இவை, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/381&oldid=1394892" இலிருந்து மீள்விக்கப்பட்டது