பக்கம்:தமிழ்க் காதல்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் கல்வி

377


திறைப் பொருளை வைத்து வணங்குமிடம் குலோத்துங்க சோழன் அடியன்றோ?

பெண்ணிலக்கியம்

அகத்திணை ஓர் பெண்ணிலக்கியம். ஆண்டுவரும் மாந்தர்களுட் பலர் பெண்பாலரே. பாங்கன் ஒரு துறையளவில் வந்து போய் விடுகின்றான். பாணன் சிலப்ொழுது வருகின்றான். தேர்ப்பாகன் கூற்றுக்குப் பெரிய இடமில்லை. தலைவனது தந்தை உடன் பிறந்தார் பற்றி ஒன்று சொல்லவிாகாது.தலைவியது தந்தையும் அண்ணன்மாரும் கூற்றுக்கு உரியவரல்லர். கற்பியலில் வரும் மழலைமகன் இளந்துதுவனேயன்றி உரையாடான். தோழியும் செவிலியும் அன்னையும் பரத்தையும் அகவிலக்கியத்தில் கொள்ளும் வாய்ப்பு மிகப் பெரிது. தலைவியே அகப்பாட்டிற்குத் தலைமையள் ஆதலின் பெண்ணாட்கள் பலர் இடம் பெறுப. செவிலியும் அன்னையும் தலைவியின் நல்வாழ்விற்காக வாழ்பவர்கள்; அவள் உடன் போகின் உயிர் புறம்போயது போல அவலக் கடலில் ஆழ்பவர்கள். தலைவனது பெருந் தொடர்பால் பரத்தை தருக்கிச் செருக்குற்றாலும், அவனுக்குத் தலைவி தானல்லள், அவனை இடித்துரைக்க வல்ல மனையாள் ஒருத்தி உண்டு என்பதனை நன்கு அறிந்தவள்.

எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் துாக்கத் துக்கும்
ஆடிப் பாவை போல -

மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே (குறுந். 8)

தலைவனது வழி அறாது மகப்பெற்றுக் காக்கும் குடியுரிமை தலைவிக்கு உண்டாதலின், அவன் அவளுக்கு அடங்கி நடக்கின்றான் என்பது பரத்தையின் குறிப்பு.

தலைவியே தலைமையள் என்பதனால், தலைவன் தலைமை இழந்தவன் என்பது கருத்தன்று. ஒரு குடும்பத்தின் அகத்துறை புறத்துறை என்னும் வாழ்க்கைத்துறை இரண்டனுள் உலகப் புறத்துறையில் அவன் தலைமை பெறுகின்றான். அவனது ஆற்றலும் நாட்டமும் அத் துறையின்கண் இயங்குகின்றன. அவனது பயிற்சி யெல்லாம் புறமாய் விளங்குகின்றன. ஆதலின் அவன் அகத்துறைக்கண் வேண்டும் பயில்வும் நினைவும் இலனாகின்றான். அகத்துறை என்பது காதற்றுறை, தலைவன் பெருவேட்கையனாக இருப்பினும், அவ்வேட்கை அவனுள்ளத்து எப்போதும் நிலையாக ஒடிக் கொண்டிராது. தலைவியோடு உடனுறையும் காலத்துள் காமம் கனிவான்; எண்ணிய வினையை முடித்த பின்றைக் காமம் ஊறுவான்; நினைத்த இன்பம் பெறகில்லாது இடையூறு படுங்கால் ஆண்மை தோன்றக் காமம் கூர்வான். “பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே” (குறுந் 136), உரியாரைக் காணின் காமம் வெளிப்படும் என்றும் தலைவனே கூறுதல் காண்க. தலைவி என்றும் காமவுள்ளத்தி. அவள் காமம் நீறு பூவா நெருப்பு. ஆர்ந்த புணர்ச்சிக்குப்பின்னும் அவள் வேட்கை அளவிற் குறையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/390&oldid=1395793" இலிருந்து மீள்விக்கப்பட்டது