பக்கம்:தமிழ்க் காதல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

தமிழ்க் காதல்


கருதுவான். மக்கள் ஆண்டு பலவாக ஆயிரம் ஆயிரம் நாட்கள் வாழ்கின்றனர். பலர் வாழ்க்கையை நினைந்து பார்ப்பின், எல்லா நாளும் சிறப்பின்றி, ஒருநாள் போலவே கழிகின்றன.இன்னநிலையை மேற்காட்டி குறுந்தொகைத் தலைவன் வெறுக்கிறான். இதுவரை வாழ்ந்ததை வாழ்க்கையாக அவன் மதிக்கவில்லை. இனியும் இவ்வாறு செல்வதை அவன் விரும்பவில்லை. நினையத்தக்க வினைச்சிறப்புடைய ஒரு நாளாவது வேண்டும் என்றும், அந்நாள் தன் உள்ளம் கவர்ந்த கள்வியின் ஆகத்தைத் "(ίροιμί நாளே என்றும், அதன்பின் வீண்வாழ்க்கை சிறுபொழுதும் வேண்டாம் என்றும், ஆராக் காதலால் தன் நண்பன் அதிரும் குறிக்கோளைச் சொல்லுகிறான். கேளிர் கேளிர் என்று தோழனை அன்புதோன்ற அடுத்தடுத்து விளித்தல் காண்க. உண்மை நட்பு மறுப்பறியாது; காமத்துக்குக் கண்ணில்லை (குறுந் 78); அந்நோய் பற்றிய தலைவனுக்கு எப்போதும் உறக்கமில்லை (ஜங் 173 என்செய்வது என்று இயல்பு உணர்ந்த தோழன் தலைவன் சொன்ன குறியிடம் செல்கின்றான்.முன்னரே வந்து நிற்கும் தலைவியின் அன்பைக் கண்டு வியக்கின்றான் (ஐங், 174) பாங்கனால் தலைவனுக்குத் தலைவியோடு ஒரு கூட்டம் நிகழ்கின்றது. இது பாங்கற்கூட்டம் எனப்படும். - பாங்கற் கூட்டம் பற்றி 27 அகப்பாடல்கள் உள. இவற்றுள் பாங்கன் கூற்றாய் வருவன இரண்டே (குறுந் 78, 204) எஞ்சிய இருபத்தைந்தும் தலைவன் கூற்றாவன. சங்கப்புலவர்களுள் மிளைப் பெருங் கந்தனார் என்பவரே தலைவன் கூற்றாகவும் பாங்கன் கூற்றாகவும் இரு பாடல்கள் பொருள் தொடர்ச்சி படப் பாடியிருக்கக் காண்கின்றோம். சங்கப் பாடல் எல்லாம் ஒன்றோடொன்று கருத்துக் கோவையில்லாத் தனித்தனித் துறைப் பாடல்களே; எனினும் கந்தனார் போலும் ஓரிரு புலவர்கள் சில துறைத் தொடர்பு அமையப் பாடிய கோவைப் பாடல்களும் உள என்பது குறிப்பிடத்தகும். - மிளைப்பெருங் கந்தனார் காமம் காமம் என்ப காமம் ... . அணங்கும் பிணியும் அன்றே துணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே யானை குளகுமென் றாண்மதம் போலப் பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே (குறுந் 136) இது தலைமகன் பாங்கற்கு உரைத்தது. காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/60&oldid=1237190" இலிருந்து மீள்விக்கப்பட்டது