பக்கம்:தமிழ்க் காதல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

49



பாங்கன் தலைவனுடன் சேர்ந்து அவன் செல்லுழி எல்லாம் செல்லும் வழக்கமுடையவன். விட்டுப் பிரியாத தோழமை கொண்டவன். தலைவன் ஒருத்திபாற் பட்ட பின்னும், பாங்கன் முன்போல் உடன்வருதல் தகாதன்றோ. இதனை அவன் எப்படி அறிவான்? தலைவனது புதிய உணர்ச்சியையும் புதிய உறவையும் அவன்தன் மெய்ப்பாட்டாலும் சொல்லாலும் தெரிந்து கொண்ட பாங்கன் குணமும் குலமும் அறிவும் சுட்டி மாற்ற முயல்கின்றான்; பயனின்மை கண்டபின் அவனோடு கூட வருவதை நிறுத்திக் கொள்கின்றான்.இதனால் தலைவனுக்குத் தலைவியைக் காணவேண் டும்போது தனித்துச் செல்லும் பெருவாய்ப்புக் கிடைக்கின்றது. இவ்வாறு பாங்கன் தலைவனது காமப்புதுமையைக் காது கொடுத்துக் கேட்கும் செவியனாய், மேலும் சிறிது இடையூறும் செய்யாத தோழனாய்க் களவின் தொடக்கத்தே வந்து போய்விடக் காண்கின்றோம். ஐந்திணை இலக்கியத்து இவன்வரவு இதனொடு முற்றும். ... - மேல் விளக்கிய இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு பாங்கற் கூட்டம் என்ற மூன்று காட்சிக்கும் குறியிடம் ஒன்றே ஆகவும், தலைவன் இடந்தலைப்பாடுபோல் மீண்டும் ஏன் தானே சென்றிருத்தல் கூடாது? பாங்கனை விடுத்ததன் நோக்கம் என்ன? பல் இழந்த கிழப்பசு இளம்புல்லைத் தடவி மகிழ்ந்த மனவின்பமே காமவின்பம், காமமாவது தன்னை உணர்ந்தார் உணராதார் எனப் பாராது எல்லாரையும் பற்றும் பெரும் பேதைமையுடையது; இனி உள்ளல் கூடாது என்றெல்லாம் காதல்காயும் தலைவனைப் பாங்கன் நகையாடி இடித்துரைக்கின்றன்ன். தன் வேட்கை தக்கதே என்றும், இடிப்புரையால் ஒழியாதது என்றும் உணர்த்த விரும்பினான் தலைவன். பாங்கன் தன் சால்லை நம்பான்; தன்னை மயக்கியவளைக் கண்டால் நம்புவான்; பின்னர் இடித்துரையான் என எண்ணினான். - - அம்ம வாழி கேளிர் முன்னின்று கண்டனி ராயிற் கழறலிர் மன்னோ. நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தற் போதுபுறங் கொடுத்த உண்கண் மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே (அகம். 130) 'தோழ! என்னைப் பிணித்தவளின் நோக்கு மதர் மதர்ப்பு உடையது. அவள் கண் பசுமைக்குக் கைபடாத, வண்டுவாய் திறந்த, துறையிடத்து வளர்ந்த நெய்தற்பூவும் நிகராகாதே. இந் நோக்கழகியை முன்னின்று நீ ஒருமுறை கண்டுவிட்டாற் போதும்; பின் என்னைக் கடிந்துரையாய் என்று ஏவவே, பாங்கனும் தலைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/63&oldid=1237193" இலிருந்து மீள்விக்கப்பட்டது