பக்கம்:தமிழ்க் காதல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

தமிழ்க் காதல்


60 தமிழ்க் காதல் இடத்து நடுயாமத்துப் பூசை தொடங்கிற்று. முருக பூசாரி வேலன் எனப்படுவான். தினையை இரத்தத்திற் கலந்து எறிந்து முருகனைக் கூவி அழைப்பதும், வெறியாட்டு என்னும் ஆவேசக் கூத்தை ஆடுவதும், கழற்சிக்காயிட்டு நோய்க்கும் முருகென மொழிதல் அவன் வாய் மரபு (அகம் 22, ஐங் 249). வழக்கம்போல, இவள் முருகேறப்பட்டவள் என்று தாய்க்குக் கூறினான். தன் காதல் நோய்க்குப் பிறிதொரு காரணம் தெய்வச்சார்பு ஆகுக. கற்பிக்கப்படுவதைக் கற்புடைக் குமரி பொறாள் அன்றோ? ஆயினும் ‘என் நோய் காதல் நோய் தலைவன் மார்புத் தழுவலால் வந்த நோய், கடவுளான நீ இதனை அறிந்திருப்பாய். அறிந்து வைத்தும், மரபறிவு அன்றி மெய்யறிவு இல்லாத பூசாரி அழைக்கத் தோன்றிய முருகனே! என் சொல்வது? கடவுளாயினும் உனக்குத் தன்னறிவு இல்லை. இத்தகைய இடங்களில் இனி வாராது வாழ்க'; அருவி யின்னியத் தாடும் நாடன் மார்புதர வந்த படர்மலி யருநோய் நின்னணங் கன்மை யறிந்தும் அண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ன? சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் கடவு ளாயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே (நற். 94) எனத் தெய்வத்தை எள்ளுகின்றது கற்பு. கற்புச் சினக்கும் போது தெய்வம் முன்னிற்குமோ? காதல் நோயைக் கழற்சிக் காயால் அறியலாம் என்றால், இவள் கற்பு மேன்மைக்கு அவமானம் என்பது தோழி கருத்து நன்றால் அம்ம நின்ற இவள் நலனே (ஐங் 248) எனினும்,இவ்வெறியாடு காலத்துக் களவுத் தொடர்பைத் தாய் வெளிப்படையாகவோ குறிப்பாகவோ அறிய வாய்ப்பு உண்டு. அறிவித்து விடவும் தலைவியும் தோழியும். முயல்வர். ஒருதாய் கட்டுவிச்சியை அழைத்துத் த்ன் மகளின் நோய்க் காரணத்தை வினவினாள். முறத்தில் நெற்களைப் பரப்பி எண்ணிக் குறி சொல்வது கட்டுவிச்சியின் வழக்கம், குறி சொல்லும்போது பல்வேறு மலைகளைச் சொல்லிப்பாடுவது உண்டு. அதன்படி முதிய அகவல்மகள் (கட்டுவிச்சி) தமிழ் நாட்டு ஒவ்வொரு மலையாகப் பாடிக்கொண்டு வந்தாள். தங்கள் தலைவன் வாழும் மலையைப் பாடியபோது, *r அகவல்'மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டே - நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே (குறுந் 23)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/74&oldid=1237201" இலிருந்து மீள்விக்கப்பட்டது