பக்கம்:தமிழ்க் காதல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

தமிழ்க் காதல்

கற்பென்னும் மணவாழ்க்கைக்கு முன்னரெல்லாம் களவென்னும் மறைவுநெறி ஒரு தலையாக நடக்கவேண்டுமோ எனின் இல்லை. இதுவே பண்டைத் தமிழ் மன்பதையின் கருத்து. இக் கருத்தினை அறிஞர் பெத்திரண்டு ரசல் இன்றும் ஒப்பக் காணலாம். மறைவுக் காதலர்கள் ஊரில் இருப்பினும் ஊர்விட்டு ஒடினும் வரைவு என்னும் பெருவேலிக்கு உட்பட்டுக் கணவன் மனைவி என்று பலர் வெளிப்படையாகச் சொல்லும் இயல்பு நிலையை ஒருநாள் அடைதல் வேண்டும். இந் நிலைபேறு அடையும் அன்புக் களவைத்தான் பெற்றோரும் போற்றி வரவேற்பர். சமுகாயமும் நல்லொழுக்கம் என உடன்பாடு அளிக்கும். களவின் முடிபு கற்பு என்பது அகத்திணை வலியுறுத்தும் அறங்களுள் தலையானது. கற்பு வழக்காவது தலைவியைக் கொடுத்ததற்குரியோர் கொடுப்பக் கரணமுறையால் தலைவன் ஏற்றுக் கொள்வதாகும்.

கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர்
கொடுப்பக்கொள் வதுவே (தொல். 1087)

எனத் தொல்காப்பியர் தமிழ்ச் சமுதாயத்தின் மணமுறையைச் சுருக் கமாக உரைப்பர்திருமணம் என்னும் கட்டுப்பாடு என்றும் யாண்டும் இன்றியமையாதது; மாறாதது. மணச் சடங்குகள் (கரணம்) தேயந்தோறும் இனந்தோறும் வேறுபடுவன: காலந்தோறும் கூடுவன, குறைவன, மயங்குவன. ஆதலின் வாழ்வியலறிஞர் தொல்காப்பியர் கற்பென்னும் தலையாய அறத்தை வலியுறுத்திக் ‘கரணமொடு புணர என்று சடங்கினைப் பொதுப்படக் கூறினார்; தன்காலத்துத் தமிழ்ச் சமுதாயம் தழுவிய சடங்குகளை கரணங்களை வெளிப்படையாகச் சொல்லவில்லை குறிப்பிட்ட ஒரு காலச் சடங்குக்கு வழிவழித் தமிழரை அடிமைப்படுத்த விரும்பவில்லை. கரணமொடு புணர என்ற பொது நடையால், காலத்திற்கேற்ற நடைமுறைகளை அறிவோடு தழுவிக்கொள்ளத் தொல்காப்பியம் வழிவகுத்தல் காண்க. இவ்வாறு இன்ன கரணம் வேண்டும் என்று விதந்து உரையாவிட்டாலும், அரசுக்கு ஒரு கொடிபோல, வரைவுக்கு ஏதாவது ஒரு கரணம் - பலர் அறியும் வெளிப்படையான சடங்கு வேண்டும் என்பதுவே ஆசிரியர் துணிபு. கரணமொடு புணர்தல்,கொடைக்குரியோர் கொடுத்தல் என்ற கற்புக் கூறுகள் இரண்டனுள், பின்னது இல்லையேனும், நன்று முன்னது இல்லாதிருத்தல் கூடாது: of Marriage in psychology of Sex

' ' ' Vol. II, p. 507, —Havelock Ellis
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/90&oldid=991644" இலிருந்து மீள்விக்கப்பட்டது