பக்கம்:தமிழ்க் காதல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

தமிழ்க் காதல்


78 தமிழ்க் காதல் கற்புத்திணை பாடியோர் தொகை 233 கற்புத்தினை மட்டும் பாடியோர் f f() பேயனார் பாடியவை 104 ஓரம்போகியார் * 3: Q4 ஒதலாந்தையார் “《་སཱ་ 65 பாலை பாடிய பெருங்கடுங்கோ རཱ ༔》 fyť} மருதன் இளநாகனார் * * 58 அம்மூவனார் ४४ प्ले .#5 Lirឆវតារ 3 * 29 цpfreiдcuавттії એ જ Zoና ஒளவையார் +4 1,ኛ நக்கீரர் х ** jt; இளங்கீரனார் 冬 ༔ སྣ། 15 இப்பதினொருவரும் கற்புத்திணைக்கு நிறைந்த பாடல்கள் அருளியவர். 28 பாடல்களை இயற்றியோர் பெயர்களை அறியோம். பொருள்வயிற் பிரிவு திருமணத்துக்குப் பின் அகத்தும் புறத்தும் யாதொரு தங்குதடையின்றிக் காதலர்கள் ஆரா இன்பத்தை அமர்ந்து அனைத்துத் துய்ப்பர்; கரணத்தின் அமைந்து முடிந்த காலை நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சி (தொல். 1091) என்று தொல்காப்பியர் களவென்னும் மொட்டு கற்பாக மலர்ந்த விடுதலையைக் குறிப்பிடுவர். தலைவன் தலைவி நெஞ்சங்கள் களவுக் காலத்து ஊரறியுமோ என்ற அச்சத்தால், தளைபட்டுக் கட்டுண்டு கிடந்தன. அன்பிற்கும் அடைக்குந்தாழ் ஏற்பட்டிருந்தது. பலரறிய மணச்சடங்கு முடிந்த பின்னர், அன்பு நெஞ்சங்களைப் பிணித்திருந்த தளைகள் தாமே அவிழ்ந்தன. காதலர்கள் கட்டற்ற கலவியின்பம் கற்பில் துய்க்கின்றனர் என்பது தொல்காப்பியக் கருத்தாகும். 'சடங்கு நிகழ்ந்து முடிந்த காலத்துக் களவுக் காதலர்கள் நெஞ்சிலிருந்த கட்டு அவிழப்பெற்றுப் புணர்வர் என்பது இந்நூற்பாவின் இயல்பான உரை. பல சொல் தந்து உரை செய்ய வேண்டா நிலையில் தொல் காப்பியச் சூத்திரம் அமைந்திருக்கும் எளிமையைக் காண்க. இவ்வ்ெளிய இனிய கற்பியல் நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் تقترن §§

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/92&oldid=1238346" இலிருந்து மீள்விக்கப்பட்டது