பக்கம்:தமிழ்க் காதல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

தமிழ்க் காதல்


பிரிவை எண்ணிய மனைவியின் பெருமூச்சு மலரைக் கரியாக்கக் கண்ட தலைவன், பிரியா முன்னரே உயிர் வேதனைப்படும் இவள், நாம் பிரிந்தால் உயிர் விடாதிருப்பாளோ? என்று புறப்பட்ட செலவைத் தள்ளிவைத்தான். குடும்பமாவது இளமையும் வளமையும் (செல்வம்) மோதிக் கொள்ளும் போர்க்களம் என்று சங்கச் சான்றோர் கண்டனர். இப்பொருகளத்தைத் திறம்படப் புனைந்தவர் பாலைக்கலி பாடிய பெருங்கடுங்கோ. இளைமை ஒரு பருவ காலம். அது கழிந்தால் திரும்ப வாராது. துய்த்துக் கழிக்க வேண்டிய நிலையாப் பொருள். செல்வத்துக்குக் காலம் இல்லை. அது சகடக்கால் போல மாறி வரக்கூடியது. வேண்டும் போது நுகரத்தகும் வரவுப் பொருள். இவற்றுள் முந்திப் பயன் கொள்ள வேண்டுவது இளமையா? வளமையா? வளமையோ வைகலும் செயலாகும் மற்றிவள் முளைநிரை முறுவலார் ஆயத்துள் எடுத்தாய்ந்த இளைமையும் தருவதோ இறந்த பின்னே (கலி. 15) என்று அறிவுடைத் தோழி தலைவனுக்கு உறழ்ந்து மொழிகின்றாள். புறம்போய்ப் பொருள் தேடினும், அடைய வேண்டும் இடம் வீடுதானே. வீட்டவள் மனக்கவலையை மாற்றாமல் புறப்படுதல் அறிவுடைமையாகாது. ஆதலின் தலைவன் மேலும் சிலநாள் இல்லில் தங்கி அன்பு தோன்ற அளவளாவிப் பிரிவது கடமை. இச் செலவுத் தாழ்ச்சி.செலவழுங்கல் - தலைவிக்கு வெள்ளம் தணிவது போன்ற ஆறுதலை அளிக்கும். இரவு பகல் போலப் புணர்வு பிரிவுகள் இயல்பு என்பதை உணர்ந்து தெளிவாள். . செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்த தவிர்ச்சி யாகும் (தொல், 1130) என்ற நூற்பா நம் முன்னையோர் உளவியலறிவுக்குச் சிறந்த சான்று. அறிவுடைக் குடும்பத்தில் காதலும் கடமையும் மோதிக் கொள்ளா, ஒத்துச் செல்லும் என்று செலவழுங்கற் பாடல்களால் கற்கின்றோம். - பிரிவாற்றாமை "கீழாய துன்பம் மேலாய இன்பத்தைத் தரவல்லதாக உள்ளது. இம் மனிதவியல்பு நமக்குப் புரியவில்லை. அவலக் கவலை கையாறு அழுங்கல்கள் நன்மையின் வெளிப்பாடுகளாகக் கொள்ளப்படும்: துன்பக் கதையில் நாம் இரக்கங்காட்டுவதற்கு இதுவுே காரணம். இக் கதை நமக்கு ஒர் இன்ப மாயையை அளிக்கின்றது. இம் மாயை துன்பத்தில் தோன்றுவது. இன்பக் கதையிடைத் துன்பச் சாயலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/96&oldid=1238366" இலிருந்து மீள்விக்கப்பட்டது