பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தமிழ்க் காப்பியங்கள்

இலக்கணம் உண்மையின் இலக்கியம் இக்காலத்து வீழ்ந்தன போலும் என்று நச்சினர்க்கினியரும் கூறினர்.

இயைபு என்ற பெயரைக் கொண்டு சொல் இயை பையும் இலக்கணமாக அமைத்தனர் உரையாசிரியர்கள். அவ்வியைபு செய்யுள் அந்தாதியென்றும், சொற்ருெடர் நிலையென்றும் சொல்லப்படும். அந்தாதி, கலம்பகம் முதலிய பிரபந்தங்கள் சொற்ருெடர் நிலைகளாகும். அவற்றில் ஒரு செய்யுளின் ஈறும் அடுத்த செய்யுளின் முதலுமாகிய சொற்கள் அந்தாதியாகத் தொடர்ந்து வந்திருக்கும். பொருட்டொடர் நிலைக்கண் இச்சொற். ருெடர்ச்சி அமைந்ததற்கு உதயணன் கதையை உதாரணமாகக் கொள்க. கலியாணன் கதை என்பதும் அத்தகையதே. இவ்வியைபிலக்கணத்தை நினைவிற் கொண்டே தண்டியலங்கார உரையாசிரியர்,

"பொருளினும் சொல்லினு மிருவகை தொடர்நிலை” என்னும் சூத்திர உரையில், இரண்டென்னது வகை யென்ற மிகையான், மூன்ருவது பொருளிலுைம் சொல்லினலும் தொடர்வது உண்டெனக் கொள்க’ என்று எழுதினர். அவ்வாறே மாறனலங்கார உரையா

சிரியரும், -

சொல்லாற் பொருளால் தொடரும் தொடர்நிலைகள் எல்லாம் அவற்றுள் எழுத்தசைசீர்-மல்கும் - அடிசொற் ருெடர்நிலைகள் அந்த முதலாம் படிவைத் தனர்.முன் பகுத்து’’’ என்பதன் உரையில், எல்லா மென்றதன்ை மூன்ருவது சொல்லினுலும் பொருளிலுைம் தொடர்வதும் உ வெனக் கொள்க’ என்று உரைத்தார். . .

1. பா. வி. ப. 95. .

2. தண்டியலங்காரம், 6. 3, மாறன். 7.