உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 93

தொல்காப்பியர் குற்றங்களைச் சிதைவென்று குறிப் பர். அக்குற்றங்களை எதிர் மறுத்து உணருந் திறத்தன குணமெனப்படும். அவை பத்து. -

"எதிர்மறுத் துணரின் திறத்தவு மவையே'

என்னும் சூத்திரத்தையும், இது, மேற் குற்றம் பத்தும் கூறி இனிக் குணமும் பத்துளவென்கின்றது' என்ற பேராசிரியர் உரையையும் காண்க.

இப் பத்துக் குணங்களின் பெயரையும் தனியே எடுத்துத் தொல்காப்பியர் கூறவில்லை. ஆயினும் பிற்காலத்து நூல் செய்த ஆசிரியர் அக் குணங்களின் பெயர்களையும் தொகுத்துக் கூறினர். அவை சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்ருேர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைத் தாதல், உலகம் மலையாமை, முறையின் வைப்பு, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்ததாதல் என்பன. இவற்றிற் பல, காப்பியங்களில் உள்ள குணவணிகளோடு ஒப்புடையனவாதலைக் காணலாம். இலக்கண நூல்களுக்கு உரியனவான இக்குணம் பத்தும் காப்பியங்களுக்கும் உரியனவே யாகும். இதனை மகா வித்துவான் பூரீ மீளுட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்,

'சொல்லும் பொருளும் தனிசிறப்பச்

சுருங்கச் சொல்லல் முதலாய தோட்டி அமைய அமங்கலமாம்

சொற்கள் புணரா தறக்களேந்து... கல்லுங் கரையக் கவிபாடுங்

கனிவாய்'

என்பதிற் புலப்படுத்தியிருக்கிருக்கள்.

1. தொல், மரபு. 109. †2. சேக்கிழார் பிள்ளைத் தமிழ், முத்தம் 3. தோட்டி-அழகு.