உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 97

நிலைக்களன்கள் பின்னர்க் கூறப்படுகின்றன. அவை சிறப்பு, நலன், காதல், வலி என்னும் நான்கோடு, புகழ்தற் பொருளும் இழியும் ஆகிய ஒன்றும் சேர்ந்து ஐந்து ஆகும். பிறிதொரு சூத்திரத்தால் பட்டாங்கு உவமம் கூறுதலும் உரித்தென்று அமைப்பர். வீர சோழியக்காரர் இம்மூன்றையும் கூட்டி, .

"பட்டாங் குரைத்தல் புகழ்தல் பழித்தலின்' என்று உரைப்பர். தொல்காப்பியர் பிறகு உவமைகளில் முதலொடு முதலும் சினையொடு சினையும் முதலொடு சினையும் சினையொடு முதலும் வேண்டியவாற்ருன் உவமம் செய்தற்கு உரியவெனவும், அங்ங்ணம் செய்யுங்கால் மரபு பிறழாமற் செய்யப்படுமெனவும் கூறுவர்."

"உவமானமும் உவமேயமும் தம்மின். ஒத்தன. வென்று உலகத்தார் மகிழ்ச்சி செய்தல் வேண்டும். இறப்ப உயர்வும் இறப்ப இழிவும் உவமிக்குங்கால் இன்னவாகச் செய்யாது சிறப்புடைமையில் தீராவாகிக் கேட்டார் மனங்கொள்ளுமாற்ருல் அமைக்கவேண்டும். உவமை அடையும் பொருளடையும் முறையே பொரு ளுக்கும் உவமைக்கும் உபகாரப்படுவன உள; அவை ஏலாதனவும் உள. அவற்றை ஏற்புழி உணர்ந்து கொள்ள வேண்டும். உவமைக்கு உவமை கூறுவதாகிய அடுக்கிய தோற்றம் நீக்கப்படவேண்டும் என்பனவும் பிறவும் உவமையைப்பற்றி அவர் கூறுவனவாகும்.

உவமைகளின் வகை

உவமைகளின் வகையாக வினை, பயன், மெய், உரு என்னும் நான்கும் உவமத்தொகை உவம விரி என

1. தொல். உவம. 34, - 2. அலங்கார ப், 18. 3. தொல். உவம. .ே

த. கா.-7