உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தமிழ்க் காப்பியங்கள்

இன்மையை உணர்ந்தே அவர் அதனைக் கூறின ரென்றும் கொள்ள வேண்டும். யாஸ்கர் தாம் இயற்றிய நிருத்தத்தில் உவம உருபுகளுக்குரிய இத்தகைய வரை யறைகள் சிலவற்றைச் சொல்கின்ருர். இவ்வுவமவுருபு வரையறை யிலக்கணத்தைத் தொல்காப்பியத்தின் பழமையை உணர்த்தும் ஆதாரங்களுள் ஒன்ருகச் சிலர் கொள்வர்.”

உள்ளுறையுவமம்

ஏனையுவமங்களைப்பற்றி இத்துணை வரையறைகளை உணர்த்திய ஆசிரியர் தொல்காப்பியர்ை, உள்ளுறை யுவமங்களைப்பற்றியும் சில சூத்திரங்களை அமைக் கின் ருர். உவமப்போலி யென்றும் அவை வழங்கும். "உவமையோடு உவமிக்கப்படும் பொருள் பிறிதொன்று. தாராது, உவம நிலங்களுட் பிறந்த பிறவிகளோடு சார்த்தி நோக்கிக் கருத்தின்ை இதற்கு இஃது உவமை என்று சொன்ன மரபினுற் கூறுங்காலை, இன்ன பொருட்கு இஃது உவமமாயிற் றென்பது துணிந்து கொள்ளத் தோன்றும் என்று அதற்கு இலக்கணம் கூறுவர். அது எல்லார்க்கும் புலனுகாமல் நல்லுணர் வுடையோர்க்கே புலகுைம்.

இவ்வுவமப் போலி வினை, பயன், உறுப்பு, உரு, பிறப்பு என ஐந்திலுைம் வரும் என்பர். ஓர் உதாரணம் வருமாறு:

"கரும்பு நடு பாத்திக் கலித்த தாமரை

சுரும்புபசி களையும் பெரும்புன லூர'

1. History of Sanskrit Poetics, p. 5. - 2. வேங்கடராஜுலு ரெட்டியார் பரணர், ப : 171-118.