உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 107.

'எண்ணிய மூன்றும் ஒருங்கு பெறுமென

நுண்ணிதின் உணர்ந்தோர் நுவன்றன. ரென்ப"

என்பது அவர் உரைக்கும் சூத்திரம்.

சுவை வாசிகம், அங்கிகம், சத்துவம் என்னும் மூன்று வகையால் உணர்த்தப்படுவதென்பது நாடக நூலா சிரியர் கொள்கை. வாசிகமாவது உரை; அவ்வவிநயத்தின் சார்பாக அலங்கார இலக்கணங்களைப் பரதர் கூறுவர். அங்கிகமென்பது உடம்பாற் செய்யும் செய்கை. சத்துவ மாவது வேம்பு தின் ருர்க்குத் தலைநடுக்கம் முதலியன உண் டாவது போல்வது. இதனைத் தமிழில் விறல் என்று கூறுவர்; சாத்விக பாவ மென்பர் வடமொழியாளர்.

விறல் பத்து வகைப்படும். அவை மெய்ம் மயிர் சிலிர்த்தல், கண்ணிர் வார்தல், நடுக்க மெடுத்தல், வியர்த் தல்,தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரற்சிதைவு என்பன. சுவைகளிலே மனக் குறிப்பு உள தாய வழி அவ் விறல் உடம்பிலே தோற்றும்; உடம்பினும் முகத்து மிகத் தோற்றும்; முகத்தினும் மிகத் தோற்றும் கண்ணில்; கண்ணினும் மிகத் தோற்றும் கண்ணின் கடையகத்து, இவை எட்டென்பது வட நூலார் மதம்,

நாடகச் சுவை ஒன்பதுக்கும் அமைந்த அவிநயங் களுக்குரிய சூத்திரங்கள் அடியார்க்கு நல்லாரால் காட்டப் படுகின்றன. -

வட நூல்களுள் நாடக ரஸம் எட்டென்பர். ஒல் வொரு சுவையும் ஸ்தாயி பாவம், விபாவம், அநுபவம், சஞ்சாரி பாவமென நான்கு வகையான பாவங்களால் உண்டாகி வளர்வது. -


..................-.-.. --س--.... --مم-۰ - ۳ - ۰ = می ساحبسته

1. சிலப். ப. 84.