உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 109.

மயமாகவே நிற்பன. இவற்றின் விசாரணை வட நூலுள் விரிந்து கிடக்கின்றது.'

தொல்காப்பியத்தில் உள்ள மெய்ப்பாடுகள்

தொல்காப்பியத்தில் பண்ணைத் தோன்றுவனவாகிய நாடகச் சுவை எட்டைப்பற்றியும், காப்பியச் சுவை எட்டைப்பற்றியும், அவை தோன்றும் நிலைக்களனைப் பற்றியும் சூத்திரங்கள் உள்ளன. உடைமை முதலிய வியபிசாரி பாவங்கள் ஒரு சூத்திரத்திற் கூறப்படும். அவை முப்பத்திரண்டு. வட நூலார் முப்பத்துமூன்று என்றுரைப்பர். தொல்காப்பியர் கூறிய இம் முப்பத். திரண்டு மெய்ப்பாடுகளுள் சில் மெய்ப்பாடுகளுக்கு ஈடானவை வட நூல்களில் இல்லை; அவற்றிற்கு ஈடாக. வேறு பாவங்கள் சொல்லப்படுகின்றன்.'

இவற்றைக் கூறியபின் அகத்திணைக்கே பெரும் பான்மை உரிய மெய்ப்பாடுகள் சொல்லப்படுகின்றன. புணர்ச்சிக்கு முன் நிகழ்வனவென்றும் பின்னர் நிகழ் வனவென்றும் அவை பிரித்து உரைக்கப்பட்டன. அவற்றைச் சிருங்கார ரஸத்திற்கு நிமித்தமான பாவங் களாகக் கொள்க. பரணர் என்னும் நூல் எழுதிய யூமான் வேங்கடராஜாலு ரெட்டியார் தொல்காப்பியத்தி லுள்ள மெய்ப்பாட்டியலைக் குறித்துக் கூறும் பின்வரும் கருத்து இங்கே பயன்படுவது ஆகும்:

ஆசிரியர் தொல்காப்பியனர் மெய்ப்பாடுகளைக் கூறு மிடத்து, ஒவ்வொரு மெய்ப்பாடும் நந்நான்கு பொரு

1. и 12. . - 2. தொல். மெய்ப்பாடு, 1-11. 3. தொல். மெய்ப்பாடு. 12, 4. வித்துவான் வே. வேங்கடராஜுலு: 5. தொல்: மெய்ப்பாடு. 13-19. ரெட்டியார்: பரணர், ப. 157, 158.