உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 125

நல்லேரி குற்செய்யுள் நாற்கரணத் தேர்பூட்டிச் சொல்லே ருழவர் தொகுத்தீண்டி-நல்லநெறி நாலே விதையா நனிவிதைத்து நாற்பொருளும் மேலே பலன்பெறச்செய் விக்கும்நாள்"

என்று அழகுபட அமைத்தார்.

്fബ്ബ്

நாடகக் காப்பிய உறுப்புக்களில் சந்தியை அடுத்து வருவது சுவை. அது அடியார்க்கு நல்லாரால் ஒன்ப தெனக் கூறப்பட்டது. இது குறித்த செய்திகள் முன்னர் ஆராயப்பட்டன. சுவை ஒன்பதுக்கும் உரிய அவிநயங் களைச் சில சூத்திரங்களால் அடியார்க்குநல்லார் விளக்கு கின்ருர். வீரசோழியம், தண்டியலங்காரம், மாறனலங் காரம் முதலிய இலக்கணங்களில் காட்டிய உதாரணச் செய்யுட்களிலும் காப்பிய இலக்கணங்களிலும் இவ் வவிநயக் குறிப்புக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றிலிருந்து இங்கே ஒரு சுவைக்குரிய சில உதாரணங்களைக் காணலாம்.

அச்சச் சுவை (பயானக ரஸம்)

1. அச்சச் சுவை அவிநயம் :

'அச்ச அவிநயம் ஆயும் காலே

ஒடுங்கிய உடம்பும் நடுங்கிய நிலையும் மலங்கிய கண்ணும் கலங்கிய உளனும் கரந்துவர லுடைமையும் கையெதிர் மறுத்தலும் பரந்த நோக்கமும் இசைபண் பினவே." -

(சிலப்பதிகாரம், அடியார். மேற். ப. 83)

1. கண்ணி, 18, 63-65.