உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 127

பிரகசனம், வியாயோகம், சமவாகாரம், வீதி, அங்கம், ஈகா மிருகம் என்பன. இவையே வட நூலுள்ளும் கூறப் படும். இவற்றை "நயநிலை மருங்கிற் சாதி” என்பர் அணியியலுடையார்."

குறிப்பு முதலியன இவற்றின் பின்வரும் குறிப்பு, சத்துவம் என்னும் இரண்டும் சுவைக்கு அங்கமிாவன. சத்துவம் என்பது சாத்விகபாவ மென்னும் தலைப்பின் கீழ் முன்னர் விளக்கப் பட்டது. அவிநயமென்னும் விலக்குறுப்பு வெகுண் டோன் அவிநயம் முதல் இருபத்துநான்கு.

அதன் பின்வரும் சொல் என்பது, உட்சொல், புறச் சொல், ஆகாயச் சொல் என்பன. அவை நெஞ்சொடு கூறல், கேட்போர்க் குரைத்தல், தானே கூறலென்றும் சொல்லப்படும். சொல்வகை யென்பது அடிவரையறை பற்றியது. வண்ணம், வரி யென்பன நாடகத்துள் வரும் இசைப்பாட்டுக்களின் அமைப்புக்களைப் பற்றியது.

. - சேதம் இறுதியுறுப்பாகிய சேதம் என்பது காப்பியத்திற்

கண்ட கதையையேனும், வழங்கும் வரலாற்றையேனும் நாடகத்திற்கேற்பக் கூட்டியும் குறைத்தும் அமைத்துக் கொள்வது. அது ஆரியம், தமிழ் என இருவகையை உடையது. -

1. ரிப்பன் பிரஸ் பதிப் பாகிய தண்டியலங்காரத்தில், சில ஏட்டுப் பிரதிகளில் இப்பத்தும், வாரம், சயாமிருகம், அரட்டு, சமவகாரம், பாணம், வீதி, சல்லாபம், உத்திரட்டாங்கம், வீராசனம், வியாயோகம் எனக் காணப்படுகின்றனவென்று ஒரு குறிப்புள்ளது; ப. 5.

2. யா. வி. ப. 526,