உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தமிழ்க் காப்பியங்கள்

சொன்ன பொருள் விளங்கும்படி விரித்துச் சொல்வது என்றும், கருப்பம் என்பது கருத் திரண்டதுபோல நலந் தரும் பொருளைத் திரளச் சொல்வது என்றும், வைரிமுக மாகிய விமரிசம் என்பது தோடு விரித்துக் கதிர் தோன் றினுற்போல நாடகப் பொருள் நன்ருக விரிந்து பயன் படுவது என்றும், நிருவாணம் என்பது விளைந்த போகத்தை அறுத்துத் துகள் களைந்துகொண்டு பெற்று மகிழ்வதுபோலத் துய்ப்பது என்றும் கூறுவர்.

நாடகச் சிறப்பு

நாடகக் காப்பியங்கள் இலக்கியங்களில் சிறந்தவை என்பதைப் பல மொழியாசிரியர்களும் தெரிவிக்கின் றனர். நாடகம் ரசமயமாக இருந்து இன்பம் பயப்பதா தலின் இன்பம் பயப்ப வருவதை நாடகம் என்று கூறும் மரபு தமிழில் உண்டாயிற்று. இது,

"நன்பனத் தண்ணற வுண்ணளி போன்ருெளிர்

நாடகமே'

என்னும் திருக்கோவையாரின் அடிக்குப் பேராசிரியர், 'கண்டார்க்கு இன்பம் செய்தலின் நாடகமென்ருர் என்று கூறும் உரையாற் புலனுகும். * -

இயல், இசை, நாடகம் என்னும் முத்திறத் தமிழின் அமைதியும் ஒருங்கே காணப்படுதலின், நாடகம் சிறந்த தாயிற்று. தமிழை அரசாக உருவகம் செய்த தமிழ்விடு தூதுடையார் அது எல்லா நலங்களும் நிரம்பக் கொலு வீற்றிருக்கும் காட்சியை, - -

1. செய்யுள், 219.