உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்கள்

'எனவே நாற்பொருளும் குறைவின்றி வருவதே பெருங்காப்பியம் என்பதாம்'.

சிறு காப்பியங்களில், தண்டியலங்கார உரையாசிரி யர் கோவையையும் அமைப்பர். தூது, உலா முதலி யனவும் அத் தகையனவே. வடமொழியில் உள்ள மேக ஸ்ந்தேசம் முதலியவற்றைக் காப்பியங்களாகவே வட நூலறிஞர் வகுப்பது இங்கே ஒப்பு நோக்குவதற்குரியது.

உலகத்துக் காப்பியம் செய்வோன் அறனும் பொரு ளும் இன்பமும் வீடும் கூறல் வேண்டு மன்றே என்பர் அடியார்க்கு நல்லார். சிலப்பதிகாரம் வீடு கூறிற்றில தென்றும், மணிமேகலை அதனைக் கூறிற்றென்றும் இவ் விரண்டும் ஒன்றுகி ஒரு காப்பியமாகி நடப்பன வென்றும் அவர் கூறுவர். இதனுல் நாற்பொருளும் பெருங்காப்பியத்தில் அமைதல் வேண்டுமென்பது பெறப்படும்.

தமிழில் புராணத்தையும் காப்பிய வகைகளிலே சேர்ப்பர், அதுவும் தொடர்நிலைச் செய்யுளே யாத லின், வடமொழியில் புராணம் என்பதற்குத் தனியே இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றைக் காப்பியங் களோடு சேர்க்காமல் தனியே எண்ணுவது வடநூலார் மரபு. இந்திய இலக்கியங்களைப்பற்றி ஒரு பெருநூல் எழுதிய ஆசிரியர் ஒருவர், செய்யுள் இலக்கியங்களை இதிஹாஸம், புராணம், தந்திரம், காப்பியம் என நான்கு வகையாக்குகின்ருர், அங்கே இதிஹாஸ புராணங்களைக் காப்பியத்தினின்றும் வேருகப் பிரித்தது, வடநூல்களை

م- سدهم- حس هم محس--- ح - مجاست. مس - د:

1. மாறனலங்காரம், உரை 2. 6a ւն. ւյ. 10-Ա1.

3. Herbert H. Gower, D. D.: A History of India n Literature p. 197.