உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் - 161

3. துது : போர் நிகழ்ச்சிக்கு முன் நடப்பது இது. அங்கதன் தூது, வீரவாகு தூது, சஞ்சயன் துாது, கண்ணன் தூது முதலியன இதன்பாற் படும்.

4. செலவு : போருக்காகப் படைகள் செல்வதை

வருணித்தல்; தகடுர் யாத்திரையில் பெரும் பகுதி இவ் வகைச் செய்தியையே சொல்லுவது போலும்.

5. இகல் : போர் நிகழ்ச்சியைக் கூறுதல்; கம்ப ராமாயணம், பாரதம், கந்த புராணம் முதலியவற்றில் பல படலங்கள் இந் நிகழ்ச்சியைக் கூறுகின்றன. யுத்த காண்டம் என்ற தனிப் பிரிவே சிலவற்றில் இருக்கிறது.

6. வென்றி : போரில் வெற்றி பெறுதலைக் கூறு தல். காப்பியத் தலைவனது வெற்றியை விரித்துக் கூறிப் பாராட்டும் பகுதி இது.

இவற்றில் தமிழ்ப் பொருளிலக்கணப் பகுதியாகிய புறத்திற் கண்ட பல செய்திகள் அமையப் பாடுவது புலவர் வழக்கம். அங்கங்கே புறப்பொருட் டுறைக்கு இலக்கியமாக உள்ள பல செய்யுட்களைக் காப்பியங்களில் காணலாம். தொல்காப்பியப் புறத்திணையியல் உரையில் உரையாசிரியர்கள் சங்க காலத்தில் இருந்த இராமாயண பாரதச் செய்யுட்களையும் தகடுர் யாத்திரைச் செய்யுட் களையும் புறத்துறைகளுக்கு உதாரணமாக எடுத்துக் காட்டுவதலுைம் இது வெளியாகும். நச்சிர்ைக்கினியர் புறத்திணையியல், 17-ஆம் சூத்திர உரையில், இவை தனித்து வாராது தொடர்நிலைச் செய்யுட்கண் வரும்: என்று சில புறத்துறைகளை உரைத்தனர்.

மாறனலங்கா ஆசிரியர் காப்பியத்துட் கூறப்படும் பொருளுக்கு இலக்கணம் வகுக்கையில்,

த. கா-11