உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தமிழ்க் காப்பியங்கள்

லாடியம் என்னும் நான்கு நெறிகள் கூறப்படும். அக்கினி புராணத்திலும் இந் நான்கு நெறிகளும் காணப்படும். போஜன் இயற்றிய ஸரஸ்வதீ கண்டாபரணத்தில் மேற் கூறிய நான்கோடு மாகதி, அவந்திகா என்ற இரண்டும் சேர்த்து ஆருகக் கூறப்படுகின்றன.

வாமனர், இந் நெறிகளுக்கு அங்கமாக இருப்பவை குண அணிகள் என்றும், அவைகளில் ஒவ்வொன்றும் சொல்லின் குணம், பொருளின் குணம் என இரு வகை ஆகும் என்றும் கூறுவர்.

நெறிகளைப்பற்றிக் கூறவந்த மாறனலங்கர்ர நூலாசிரியர், அவை ஒவ்வொரு நாட்டிலும் வழங்கும் முறைபற்றிப் பெயர் பூண்டன என்பர்.

மன்னியபேர் யாப்பிற்கு வைதருப்பம் வான்கவுடம் பன்னியபாஞ் சாலம் எனப்பகுத்து-மின்னிடையாய் நன்னூன் முழுதுணர்ந்தோர் நாட்டகத்து நாட்டலுறீஇ முன்னூலுட் கண்டநெறி மூன்று.”

- நெறியைப் பாகம் என்ற சொல்லாலும் உரையாசிரி

யர் குறிப்பர். மெல்லென்ற விழுமிய இனிய மொழியும்

மெல்லென்ற விழுமிய இனிய அறம் முதலிய நாற்பொரு ளும் பொருந்துவன வைதருப்ப பாகம் என்றும், விழுமிய

சொற் கடினமும் பொருட் கடினமும் தோய்ந்து அரிய

நடைத்தாய்ப் புலவற்ை கூறப்படுவது கவுட பாகம்

என்றும், மென்மையும் கடினமுமாகிய வைதருப்ப கவுடங்

களோடு கூடாதே இடைநிலைப்பட்டனவாம் இனிய

சொல்லானும் பொருளானும் தடையின்றி. நடைபெற்று

ஒழுகுவது பாஞ்சாலம் என்றும் கூறுவர்.

1. மாறன், 77.